Header Ads

ஐ திரை விமர்சனம் :

பலத்த எதிர்பார்ப்புக்கு பின்பு ஷங்கரின் பிரம்மாண்ட படமான ஐ இன்று உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது. இதற்கு முன்னதாகவே வெளிநாடுகளில் பிரிமியர் ஷோ வெளியானது. இப்படத்தை பார்த்த ரசிகர்கள் நமக்கு அனுப்பிய விமர்சனம்.சென்னையின் புறநகர் பகுதியில் வாழும் நாயகன் விக்ரம் பாக்சராக வருகிறார். இதே இடத்திற்கு நாயகி எமி ஜாக்சனும் 16 வருடத்திற்கு பின்பு வருகிறார். அப்போது எதிர்பாராதவிதமாக எமியை சந்திக்கும் விக்ரம் மெர்சலாகி காதலில் விழுகிறார்.எமி ஒலிம்பிக் மற்றும் டாப் நிறுவனங்களின் சர்வதேச மாடலாக இருக்கிறார். இப்படத்தின் வில்லனும் பிரபல மாடலாக உள்ளார். ஆனால் இவருக்கு எமியால் பல வாய்ப்புகள் தட்டிப்போகிறது. அதனால் அவரது எதிர்காலத்தை நாசமாக்க எண்ணுகிறார். இதற்காக அவரைப்பற்றி தவறான வீடியோக்களை பரப்புகிறார்.அந்த சமயத்தில் தனது தந்தையின் ரசாயன தொழிற்சாலையில் கண்டுபிடித்த மருந்தின் மூலம் அழகை திரும்ப பெற எண்ணுகிறார். ஆனால் இந்த மருந்தை சோதனை செய்வதற்காக விக்ரமை செலக்ட் செய்கிறார்கள்.இதனால் ஆணழகனாக மாறும் விக்ரமின் வாழ்க்கை என்ன ஆனது என்பதே பரபரப்பான இரண்டாம் பாதி.ஷங்கர் இதுவரை எடுத்த படங்களிலேயே இதுதான் பிரம்மாண்டத்தின் உச்சமாக கருதவேண்டும். அந்தளவு மெனக்கெட்டிருக்கிறார். பிசிஸ்ரீராமின் ஒளிப்பதிவில் அகோர காட்சிகளை கூட அழகாக காட்டியுள்ளார்.ஏ.ஆர் ரஹ்மானின் பின்னணி இசையில் மிரட்டியுள்ளார். எமிஜாக்சன் அழகு பதுமையாக வந்து அனைவரது மனதையும் கொள்ளை கொள்கிறார்.படத்தின் மொத்த பலமும் விக்ரம் மட்டும்தான். இத்தனை வலிகளையும் ஒரு படத்திற்காக ஒருவர் என்றால் இந்தளவு சாத்தியமில்லை.ஆணழகனாகவும் சரி, அகோரமாகவும் சரி ஒவ்வொரு அசைவிலும் நம்மை அசையவிடாமல் கட்டிப்போட்டு விடுகிறார்.

No comments:

Powered by Blogger.