ராகு, கேது பூஜையில் காஜல்! சமந்தா காரணமா?
காஜல் அகர்வாலுக்கு தொடர்ந்து பிரச்னை மேல் பிரச்னைகள் வருகிறதாம். படங்கள் சரியாகப் போகவில்லை என்று வருத்தத்தில் இருந்தார் காஜல்.
அந்த சமயத்தில் காதல் கிசுகிசுக்கள் கிளம்ப இன்னும் அப்செட் ஆகிப் போனார். இதற்குப் பரிகாரமாக ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்தார் காஜல்.
சமந்தா கொடுத்த ஆலோசனையோ என்னவோ? சமீபத்தில் காளஹஸ்திக்கு சென்ற காஜல் ராகு, கேது உள்ளிட்ட நவகிரகங்களுக்குப் பூஜை செய்துவிட்டு வந்திருக்கிறார்.
ஏற்கெனவே சமந்தாவும், சித்தார்த்தும் காளஹஸ்தி கோயிலில் ராகு, கேது பூஜை செய்தது குறிப்பிடத்தக்கது.
No comments: