Header Ads

ரூ.30 ஆயிரத்துக்கு விற்பனை: விபசார விடுதியில் சித்ரவதைக்கு ஆளான பெண்ணின் மனநலம் பாதிப்பு

விபசார விடுதியில் ரூ.30 ஆயிரத்துக்கு விற்கப்பட்ட பெண், சித்ரவதைக்கு உள்ளாகி மனநலம் பாதிக்கப்பட்டார்.

இந்த பரிதாப சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:–

குஜராத் பெண்

குஜராத் மாநிலத்தை சேர்ந்த 23 வயது இளம்பெண் ஒருவரை வேலை வாங்கி தருவதாக அலாம், அப்ஷல் என்ற 2 பேர் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன் மும்பைக்கு அழைத்து வந்தனர். ஆனால் அவர்கள் சொன்னபடி வேலை வாங்கி கொடுக்காமல் பிவண்டியில் உள்ள ஒரு விபசார விடுதியில் ரூ.30 ஆயிரத்துக்கு அந்த பெண்ணை விற்று விட்டு விட்டனர்.

அந்த பெண்ணை விபசாரத்தில் ஈடுபடும்படி விபசார விடுதி தலைவி ரூபி (34) வற்புறுத்தினார். ஆனால் அந்த பெண் மறுத்து விட்டார். இதனால் கோபமடைந்த 3 பேரும் அந்த பெண்ணை அடித்து உதைத்தும், சூடு வைத்தும் சித்ரவதை செய்தனர். பற்களை அடித்து நொறுக்கினார்கள். கொடுமையின் உச்சகட்டமாக அவர்கள் அந்த பெண்ணின் மார்பகத்தை அறுத்தனர்.

மனநலம் பாதிப்பு

இதுகுறித்து தகவல் அறிந்த பிவண்டி போலீசார் சம்பவ இடம் விரைந்து ரூபியை கைது செய்தனர். மற்ற 2 பேரும் தலைமறைவாகி விட்டனர். பாதிக்கப்பட்ட பெண்ணை போலீசார் மீட்டு சிகிச்சைக்காக தானே மாநகராட்சி மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் அந்த பெண் மேல் சிகிச்சைக்காக கடந்த வாரம் மும்பையில் உள்ள நாயர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். டாக்டர்கள் அந்த பெண்ணுக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இதற்கிடையே தனக்கு நேர்ந்த இந்த கொடூர சம்பவத்தால் அந்த பெண் அதிர்ச்சியில் உறைந்து பித்து பிடித்தவர் போல் ஆகிவிட்டார். அவர் மனநலம் பாதிக்கப்பட்டு உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

No comments:

Powered by Blogger.