இயக்குனர் - இசை அமைப்பாளர் நேருக்கு நேர் மோதல்
இயக்குனர், இசை அமைப்பாளர் நேருக்கு நேர் மோதிக்கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தமிழில் பல்வேறு படங்களுக்கு இசை அமைத்திருப்பவர் தேவி ஸ்ரீ பிரசாத். டோலிவுட்டில் முன்னணி இசை அமைப்பாளர்களில் ஒருவராக இருக்கிறார். என்.டி.பாலகிருஷ்ணா நடித்துள்ள லெஜென்ட் என்ற படத்துக்கு இசை அமைத்தார். பொயாபதி டைரக்டு செய்துள்ளார். இப்படம் சமீபத்தில் திரைக்கு வந்தது. இதையடுத்து இப்படத்தின் சக்சஸ் பார்ட்டி ஏற்பாடு செய்தார் பாலகிருஷ்ணா. இதில் இயக்குனர் பேசும்போது, இப்படத்துக்கு இசை அமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத்திடம் இசையை வாங்குவதற்குள் படாதபாடு பட்டுவிட்டேன். சென்னையில் இப்படத்துக்காக 15 நாட்கள் ரீ ரிக்கார்டிங் நடந்தது. அப்போது அவரிடம் அப்பணியை முடிப்பதற்குள் வியர்வை கொட்டிவிட்டது.
பின்னர் இறுதி இசை கோர்ப்பு 56 மணி நேரம் எடுத்துக்கொண்டார் என்று இயக்குனர் பேசியதை கண்டு அதிர்ச்சி அடைந்த தேவி ஸ்ரீ பிரசாத் வேகமாக இயக்குனரின் கையிலிருந்த மைக்கை பிடுங்கி பேசத் தொங்கினார். நான் தொழில்ரீதியாக பணியாற்றுபவன். ஒரு நாளைக்கு குறைந்தது 17 மணி நேரம் வேலை செய்கிறேன். ரீ ரிக்கார்டிங் நடந்தபோது இயக்குனர் பொயாபதி 3 நாட்கள் மட்டுமே அங்கு வந்தார். அங்குவந்தபிறகுகூட ஆங்கில படங்களை பார்ப்பதிலேயே நேரத்தை செலவிட்டார்.
இந்த படத்துக்காக எல்லா தொழில்நுட்ப கலைஞர்களும் நன்றாக வேலை செய்தார்கள். அதன் பலன் முழுவதையும் இயக்குனர் மட்டுமே எடுத்துக்கொள்ள முயல்வது சரியானதல்ல என்றார். நட்புடன் சுற்றி திரிந்த இருவரும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதை கண்டு ஹீரோ பாலகிருஷ்ணா ஷாக் ஆனார். சந்தோஷமாக நடக்க வேண்டிய பார்ட்டி மோதலில் முடிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. -
No comments: