காதலித்து பாலியல் பலாத்காரம் செய்து இளம்பெண்ணை ஏமாற்றிய டி.வி நடிகர் கைது..
மும்பை கோரேகாவை சேர்ந்தவர் அஷிஷ் (வயது24). டி.வி நடிகர். இவருக்கும், தன்னுடன் சேனலில் பணியாற்றும் 21 வயது இளம்பெண்ணுக்கு இடையே பழக்கம் ஏற்பட்டது. பின்னர் இருவரும் காதலிக்க ஆரம்பித்தனர். இதைத்தொடர்ந்து 2 பேரும் ஒன்றாக சேர்ந்து வெளியிடங்களில் சுற்றித்திரிந்தனர். அப்போது, அஷிஷ் அந்த பெண்ணை கற்பழித்ததாக கூறப்படுகிறது. பின்னர், அந்த பெண் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு அஷிசிடம் கூறினார். ஆனால், அந்த பெண்ணை திருமணம் செய்ய அஷிஷ் மறுத்துவிட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண், போலீசில் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குபதிவு செய்து டி.வி.நடிகர் அஷிசை கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
No comments: