Header Ads

ரேடார் செயல் இழந்த பின் நடுவானில் துணை விமானி அவசரமாக மொபைல் போனில் பேசி உள்ளார்- மலேசிய பத்திரிகை தகவல்

விமானத்தின் கறுப்பு பெட்டியை தேடும் பணி ஒருபுறம் நடந்து வந்தாலும் மறுபுறம் அமெரிக்காவின் புலனாய்வு அமைப்பான எப்பிஐ (FBI)  மலேசிய போலீசாருடன் இணைந்து விசாரணை நடத்தி வருகிறது. மேலும் சீன உளவுத்துறை, பிரிட்டனின் எம்ஐ6 ஆகியவையும் விசாரணை நடத்தி வருகிறது,

முதல்கட்டமாக விமானத்தின் தலைமை பைலட் சகாரி அகமது ஷா வீட்டில் அதிநவீன கருவிகள் மூலம் சோதனை செய்தனர்.. விமானியின் வீட்டில் இருந்த  கம்ப்யூட்டர்களின்  ஹார்டு டிஸ்க்குகளை கைப்பற்றியுள்ளனர். இதில் விமானம் குறித்து பல விடைதெரியாத கேள்விகளுக்கு பதில் இருக்கலாம் என கருதப்படுகிறது. தொடர்ந்து இது குறித்து விசாரணை நடந்து வருகிறது. துணை  பைலட் அகமது ஷா வீட்டிலும் போலீசார் சோதனை நடத்தினர்.

விமானம் தனது கட்டுப்பாட்டில் இருந்து விலகுவதற்கு சிறிது நேரத்துக்கு முன்பு விமானிகள் அறையில் இருந்து  மலேசிய விமான கட்டுப்பாட்டு அறையுடன் பேசிய விவரம் வெளியாகி உள்ளது.  விமானி  அறையில் இருந்து பேசியவர் அனைத்தும் சரியாக உள்ளது. இரவு வணக்கம் (ஆல் ரைட், குட்நைட்) என பேசியுள்ளார். அதன் பிறகு தான் கட்டுப்பாட்டு அறையுடனான விமானத்தின்  தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது.  இந்நிலையில், மலேசிய விமானம் தொடர்பில் இருந்து துண்டிக்கப்படுவதற்கு முன்பாக விமானிகள் அறையில் இருந்து, அனைத்தும் சரியாக உள்ளது.  இரவு வணக்கம் என்று பேசியது உதவி விமானி பாரீக் அப்துல் ஹமீது என்று புதிய தகவல் தெரிவிக்கின்றது.  கடைசி வார்த்தைகளை பேசியது யார் என்பது சரியாக தெரிய வராத நிலையில் அதனை விமானி பேசியிருப்பார் என்ற நோக்கில் விசாரணை நடைபெற்று வந்தது.

துணை விமானி நடுவானில் பறக்கும் போது  மொபைல் போனில் யாருக்கோ அழைப்பு விடுத்து உள்ளார். ஆனால் அது ரேடார் திரையில் இருந்து மறைக்கபப்பட்டு உள்ளது என விசாரணை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.  அந்த அழைப்பு  திடீர் என துண்டிக்கபட்டு உள்ளது. விமானம் வேகமாக நகரும் போது தொலைத்தொடர்பு துண்டிக்கபட்டு இருக்கவும் வாய்ப்பு உள்ளது என மலேசிய பத்திரிகை ஒன்று தெரிவித்து உள்ளது.

பாரீக் அப்துல் ஹமீது மீண்டும் தொடர்பு கொண்டுள்ளார். ஆனால் அவர் யாரை தொடர்பு கொண்டார் என தெரிய வில்லை.தொடர்ந்து அவரது தொலைபேசி உரையாடலை ஆராய்ந்து வருகிறார்கள்.  என மலேசிய பத்திரிகை செய்தி வெளியிட்டு உள்ளது.

No comments:

Powered by Blogger.