Header Ads

சிம்புவுடனான காதல் முறிந்தது, முறிந்ததுதான் நடிகை ஹன்சிகா பேட்டி

நடிகை ஹன்சிகா தனது ஒவ்வொரு பிறந்தநாளின்போதும் ஆதரவற்ற ஒரு குழந்தையை தத்து எடுத்து வளர்க்கிறார். இதற்காக அவர் மும்பையில், ஆதரவற்றோர் இல்லம் நடத்தி வருகிறார். இதுவரை அவர் 25 குழந்தைகளை தத்து எடுத்து இருக்கிறார். அவர்களுக்கான உணவு, உடை, இருப்பிடம், கல்வி ஆகிய செலவுகளை அவரே ஏற்றுக்கொள்கிறார்.

அந்த குழந்தைகள் அனைவரும் ஹன்சிகா மீது மிகுந்த பாசம் கொண்டுள்ளன. அவர்களிடம் ஹன்சிகாவும் பிரியமாக இருக்கிறார். ஓய்வு கிடைக்கும்போதெல்லாம் மும்பை சென்று குழந்தைகளை கவனித்துக் கொள்கிறார்.

குலுமனாலி பயணம்

கோடை விடுமுறையையட்டி தனது 23 தத்து குழந்தைகளையும் குளுமையான மலைப்பிரதேசத்துக்கு அழைத்துச் செல்ல ஹன்சிகா திட்டமிட்டார். இதற்காக அவர் குலுமனாலியை தேர்வு செய்து இருக்கிறார். இதுபற்றி அவர், தினத்தந்தி நிருபரிடம் கூறியதாவது:-

’’கோடை விடுமுறைக்காக, என் தத்து குழந்தைகளை எங்காவது வெளியூருக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்று ஆசைப்பட்டேன். கோடை வெயிலுக்கு இதமான இடம், குலுமனாலி. ஆனால், அங்கே குளிர் அதிகம். எங்கள் இல்லத்தில் உள்ள 2 குழந்தைகளுக்கு குளிர் ஒத்துக்கொள்ளாது. அதனால் அவர்கள் இரண்டு பேரை தவிர, மீதி உள்ள 23 குழந்தைகளையும் குலுமனாலிக்கு அழைத்து செல்கிறேன்.

4 உதவியாளர்கள்

எங்களுடன் அம்மாவும் வருகிறார். குழந்தைகளை கவனித்துக் கொள்ள 4 உதவியாளர்களை அழைத்துச் செல்கிறோம். அனைவரும் மும்பையில் இருந்து ரெயிலில் புறப்படுகிறோம். குலுமனாலி மற்றும் இமயமலை பகுதிகளில் 4 நாட்கள் சுற்றுப்பயணம் செய்துவிட்டு மும்பை திரும்ப திட்டமிட்டு இருக்கிறோம்.
99 சதவீதம் நான் இந்த பயணத்தில் கலந்து கொள்வேன். ஒருவேளை தவிர்க்க முடியாத படப்பிடிப்பு இருந்தால், குழந்தைகளை என் அம்மாவும், உதவியாளர்களும் அழைத்துச் செல்வார்கள். குழந்தைகளின்குலுமனாலி பயணம் தடைபடாது.அடுத்த வருடம், என் தத்து குழந்தைகளை வெளிநாடு அழைத்துச் செல்ல முடிவு செய்து இருக்கிறேன். இதற்காக, 25 குழந்தைகளுக்கும் Ôபாஸ்போர்ட்Õ எடுத்து விட்டேன்.

இவ்வாறு ஹன்சிகா கூறினார்.

முறிந்தது, முறிந்ததுதான்

சிம்புவுடனான காதல் முறிவு பற்றி அவரிடம் கேட்டபோது, ஹன்சிகா கூறியதாவது:-

’’என் காதல் கடந்த வருடம் அக்டோபர் மாதமே முறிந்து விட்டது. முறிந்தது, முறிந்ததுதான். அதனால் பெரிய பாதிப்பு ஒன்றும் இல்லை. நான் இப்போது நடிப்பில் முழு கவனம் செலுத்துகிறேன். நிறைய படங்களை ஒப்புக்கொண்டிருக்கிறேன். இந்த வருடம் மட்டும் நான் நடித்த 6 படங்கள் திரைக்கு வருகின்றன.
அரண்மனை படம் நன்றாக வந்திருக்கிறது. இதுவரை பார்த்திராத ஹன்சிகாவை அந்த படத்தில் பார்ப்பீர்கள். மேற்கண்டவாறு ஹன்சிகா கூறினார்.

No comments:

Powered by Blogger.