முற்றுப் புள்ளி வைத்த ரஜினி! முடிவுக்கு வந்த லிங்கா பிரச்னை!!
ரஜினி நடிப்பில் டிசம்பர் 12ல் வெளியான லிங்கா படம் எதிர்பார்த்த அளவிற்கு வருமானம் கிடைக்காததால் விநியோகஸ்தர்கள் பிரச்னை எழுப்பினர். இந்தப் பிரச்னை முடிவுக்கு வந்துவிட்டதாக தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
லிங்கா படத்தினால் பெரிய அளவிற்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் இப்பிரச்னையில் ரஜினிகாந்த் தலையிட்டு தயாரிப்பாளரிடம் நஷ்டத் தொகையை பெற்றுத் தரவேண்டும் என்று விநியோகஸ்தர்கள் தொடர் உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டம் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர்.
ரஜினி தலையிட்டு பிரச்னையை தீர்த்து வைத்து விட்டதாக திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் அறிவித்துள்ளது. ஒரு பெரிய தொகையை இழப்பீடாக ரஜினி கொடுத்து பிரச்னையைத் தீர்த்து வைத்து விட்டார். 10 நாளுக்கு முன்னதாகவே இந்த தகவலை தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ் மூலம் தயாரிப்பாளர் சங்கத்திற்கு தகவல் வந்து விட்டது.
இந்தத் தொகையை விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்க உரிமையாளர்கள் பிரித்துக் கொள்வதிலேயே தாமதம் ஏற்பட்டதாகவும், இனி இந்தப் பிரச்னைக்கும் ரஜினிக்கும் எந்த வித தொடர்பும் இல்லை என்றும் தயாரிப்பாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
No comments: