காதலுக்கு மகுடம் சூடிய கல்லறையில் கருவறை பாடல்..! வீடியோ இணைப்பு !
பெப்ரவரி மாதம் பிறந்ததுமே சட்டென்று நினைவுக்கு வருவது காதலர் தினம்தான். காதலிக்கு பரிசு வாங்கவும், காதலை வெளிப்படுத்தவும் இதை ஒரு சந்தர்ப்பமாக இளைஞர்கள் பலர் பயன்படுத்திக் கொள்கின்றனர்.
இதேவேளையில் காதலில் தோற்றவர்கள் காதலை திட்டவும் காதலை எதிர்த்து தமது எதிர்பினையும் வெளிக்காட்டத்தான் செய்கின்றார்கள் இருந்தும் தோற்றாலும் சரி அல்லது ஜெயித்தாலும் சரி அனைவருமே பெப்ரவரி 14 காதலர் தினத்தை மறந்து விடுவதில்லை.
இந்த வகையில் பிரான்ஸ் வாழ் தமிழ் கலைஞர்களின் படைப்பாக AS film style சுபாஸ் தயாரித்து இயக்கியிருக்கும் கல்லறையில் கருவறை எனும் பாடல் வெளிவந்துள்ளது.
எதிர் காலத்தில் தமிழ் மொழி அழிந்து விட போவதில்லை எம் இளம் தலை முறையினரும் தமிழ் ஆற்றலும் மொழி ஆற்றலும் கொண்டுள்ளார்கள் என நிரூபிக்கும் வகையில் இப்பாடலுக்கு தனது வரிகள் மூலம் "கரு" கொடுத்துள்ளார் "கவி இளவல்" லதீப் பாலசுப்ரமணியம் .
இதற்கு தனது இசைமூலம் உயிர் கொடுத்துள்ளர் தென்னிந்திய இசை அமைப்பாளார் அக்னி கணேஷ் இதற்கு தனது குரல் மூலம் உணர்வு கொடுத்துள்ளார் தென்னிந்திய திரைப்பட பின்னணி பாடகர் ராகுல்.
இப்பாடலுக்கு தம் உணர்வுகளாலும் நடிப்பாற்றலாலும் உருவம் கொடுத்துள்ளார்கள் "நாயகன்" ஜெய்வி , சுபாஸ் , காயத்ரி ஆகியோர் இவர்கள் தாம் ஏற்றுக் கொண்ட பாத்திரத்திரத்தில் மிகவும் அனுபவம் மிக்க கலைஞர்கள் போன்று கச்சிதமாக நடித்துள்ளார்கள் என்றால் மிகையாகாது.
இப்பாடலுக்கான ஒளிப்பதிவினை சுபாஸ், வினோஜன் , மிதுர்ஷன் ஆகியோர் சிறப்பாக செய்துள்ளார்கள் .
எடிட்டிங்கினை சுபாஸ் தனது கற்பனைக்கு ஏற்றவாறு சிறப்
பாகசெய்துள்ளார்.
காதலை மையப்படுத்தி காதலின் புனிதத் தன்மையினை கொச்சைப்படுத்தாது சிறப்பாக உருவாக்கி காதலுக்கே ஒரு மகுடத்தினை சூடியுள்ளார்கள் கல்லறையில் கருவறை படக்குழுவினர்.
No comments: