மும்பை கோர்ட்டில் இருந்து தீவிரவாதி தப்பி ஓட்டம்
மும்பையில் இன்று கோர்ட்டுக்கு கொண்டு வரப்பட்ட தீவிரவாதி, போலீஸ் பாதுகாப்பை மீறி அங்கிருந்து தப்பி ஓடியது பரபரப்பை ஏற்படுத்தியது.
அகமதாபாத் மற்றும் சூரத்தில் கடந்த 2008-ம் ஆண்டு நடந்த குண்டு வெடிப்பு தொடர்பாக இந்தியன் முஜாகிதீன் தீவிரவாத இயக்கத்தைச் சேர்ந்த அப்சல் உஸ்மானியை போலீசார் கைது செய்தனர். தீவிரவாத தாக்குதலுக்கு வாகனங்கள் மற்றும் வெடிகுண்டுகளை அப்சல் உஸ்மானி வழங்கியதாக போலீசார் தெரிவித்தனர். மேலும் உஸ்மானி கொடுத்த தகவலின் பேரில் மும்பையில் உள்ள தீவிரவாத குழுக்களும் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில், அப்சல் உஸ்மானி மற்றும் 22 பேரை மும்பையில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தினர். உஸ்மானி மீது குற்றச்சாட்டுகளை பதிவு செய்வதற்காக கொண்டு வந்தனர். ஆனால், மதிய இடைவேளைக்குப் பிறகு கோர்ட்டில் இருந்து உஸ்மானியைக் காணவில்லை. அவரை கைது செய்ய கோர்ட் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.
கடந்த மாதம் இந்தியன் முஜாகிதீன் அமைப்பின் நிறுவனர் யாசின் பட்கலை இந்திய பாதுகாப்பு படையினர் கைது செய்து, அனைவரது பாராட்டையும் பெற்ற நிலையில், இப்போது தீவிரவாதியை தப்ப விட்டது பாதுகாப்பு நடவடிக்கையில் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
No comments: