Header Ads

கேள்விப்பட்ட லட்சுமிமேனன் குடும்பமே இப்போது பதற்றத்தில். அப்படி என்ன சொன்னார் பாரதிராஜா?

பதக்கம் அணிவிக்கிறேன்னு கழுத்தையே காலி பண்ணுற வேலையை மிக நுணுக்கமாக செய்வதில் கோடம்பாக்கத்திற்கு நிகர் அதுவேதான். பாராட்டினால் ஒரேயடியாக பாராட்டுவதும், காலை வாரிவிட நினைத்துவிட்டால் ஒரேயடியாக பல் உடைகிற அளவுக்கு வாரி விடுவதும் இங்கே சகஜம். ஆனால் இதற்கெல்லாம் அடங்காத இலக்கணம்தான் இது. இருந்தாலும் இடிக்கிறதே… என்ன செய்ய?

பாரதிராஜா ஒரு விழாவில் பங்கெடுக்கிறார் என்றால், ஹார்ஸ் ஆஃப் யூ என்ற வார்த்தையை எத்தனை முறை உபயோகிக்கிறார் என்று எண்ணிக் கொண்டே வந்தால், நம்பர் கிடைக்காமல் தடுமாறும் சூழ்நிலை ஏற்படும். யாரை பார்த்தாலும் ஹார்ஸ் ஆஃப் யூ என்று பாராட்டுகிற அளவுக்கு மனசை விசாலமாக வைத்திருப்பதும் அவர் தப்பில்லை. அட… விஷயத்துக்கு வாய்யா. என்கிறீர்களா?

வாகை சூடவா படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் பாரதிராஜா பேசியதை கேட்டால், அடுத்த பத்து வருஷத்துக்கான தேசிய விருதை இனியா வீட்டில்தான் அடுக்கி வைப்பார்களோ என்கிற அச்சம் வரும். அந்தளவுக்கு அவரை பாராட்டி நனைத்திருந்தார் அவர். (ஆங்… அந்த ஹார்ஸ் ஆஃப் யூ தான்) அதற்கப்புறம் நீ சரின்னா என் அடுத்த படத்துல நீதான் ஹீரோயின் என்றெல்லாம் கூறி, இனியாவை இன்னொரு ஊர்வசி, ரம்பா, மேனகையாக்கிவிட்டு போனார். அதற்கப்புறம் இவர் கொடுத்த வாய்ப்பு என்னாச்சு? இனியா என்னானார்? அவரது கால்ஷீட்டுக்கு கோடம்பாக்கம் வைத்திருக்கும் விலை என்ன என்பதையெல்லாம் நாடு நன்கு அறியும்.

இந்த அச்சம் மறைவதற்குள் லட்சுமிமேனை ஒரு விழாவில் அவர் பாராட்டிய வார்த்தைகள்தான் கேரளா வரைக்கும் பார்சல் கட்டி அனுப்பப்பட்டுள்ளதாம். கேள்விப்பட்ட லட்சுமிமேனன் குடும்பமே இப்போது பதற்றத்தில். அப்படி என்ன சொன்னார் பாரதிராஜா? அந்த பொண்ணு எங்க கால் வச்சாலும் அந்த இடம் பொன்னாயிடுது. எந்த படத்துல நடிச்சாலும் அது ஹிட்டாகுது. அருமையா நடிக்கிற பொண்ணாவும் இருக்கு. ஹார்ஸ் ஆஃப் டூ லட்சுமி…!

No comments:

Powered by Blogger.