இரண்டாம் உலகம் திரை விமர்சனம்
நடிகர் : ஆர்யா
நடிகை : அனுஷ்கா
இயக்குனர் : செல்வராகவன்
இசை : ஹாரிஸ் ஜெயராஜ், அனிருத்ஓ
ளிப்பதிவு : ராம்ஜி
காதலே இல்லாத உலகத்தை உருவாக்கி அதில் காதலை தழைக்க வைப்பதுதான் இரண்டாம் உலகம்.
இரண்டு வெவ்வேறு உலகில் நடக்கும் கதை. பூமியில் நடப்பது அச்சு அசல் செல்வராகவன் பாணி காதல் கதை, மிகவும் ரசிக்கும்படி இருக்கிறது. வேறு ஒரு கிரகத்தில் நடப்பதும் செல்வராகவன் பாணி காதல் கதைதான் ஆனால் காதல் மட்டும் இல்லை வேறு பல விசயங்கள் இருக்கின்றன.
வேறு ஒரு உலகத்தில் நடக்கும் கதையில் பெண்களை வெறும் போகப்பொருளாகவே பார்க்கிறார்கள், காதல் என்பதே இல்லை அதனால் அந்த உலகத்தில் பூக்கள் பூப்பதே இல்லை. அந்த உலகத்தில் அந்த மனிதர்களுடனே வாழும் தெய்வமாக ஒரு பெண் இருக்கிறார், அவரின் முயற்சியில் அந்த கிரகத்தில் காதல் பூத்ததா என்பதுதான் கதை.
முதல்பாதியில் இரண்டு உலகங்களிலும் ஆர்யாவுக்கும் அனுஷ்காவுக்கும் நடக்கும் காதல் கதைகள் நன்றாக இருக்கிறது. குறிப்பாக பூமியில் நடப்பது போல் காட்டப்படும் கதை மிகவும் ரசிக்கும்படியாக இருக்கிறது. பூமியில் இருக்கும் அனுஷ்கா இறப்பதுடனும், வேறு உலகத்தில் இருக்கும் அனுஷ்கா தற்கொலைக்கு முயற்சிப்பதுடனும் முதல் பாதி முடிகிறது.
அனுஷ்கா அவ்வளவு அழகாக இருக்கிறார். ஆர்யாவிடம் காதலி சொல்லும்போது, இரண்டு உலகத்திலும் ஆர்யாவை சுத்தலில் விடும்போது என அனுஷ்கா, கச்சிதமாக செல்வராகவனின் கதாநாயகியாக பொருந்துகிறார். ஆர்யா உழைத்திருகிறார். காமெடியன் என்று தனியாக இல்லை ஆனால் வசங்கள் காமெடியாகவும் சிறப்பாகவும் இருக்கிறது.
ஹாரிஸ் ஜெயராஜின் பாடல்கள் மற்றும் அனிருத்தின் பிட் சாங்ஸ் ஆகியவை நன்றாக இருக்கின்றன. ஆனால் ரீரிக்கார்டிங் சிறப்பாக அமையவில்லை. படத்தோடு ஒன்றாமல் தனியாக இருக்கிறது. குறிப்பாக படத்தின் அடிநாதமான அந்த பூக்கள் பூக்கும் காட்சிக்கு சரியான பின்னணி இசை இதுவல்ல அனிருத் அவர்களே. அந்த காட்சியில் எவ்வளவு ஒன்றியிருக்கவேண்டும் ஆனால் துளியும் ஒட்டவில்லை.
ஃபேண்டஸி கதைகளில் லாஜிக் பார்க்கக்கூடாது. ஒரு மனிதன் மலைமேல் ஏறி வேறு ஒரு உலகத்துக்கு போக முடியுமா முடியாதா என்ற லாஜிக்கை பார்க்கக்கூடாதுதான். ஆனால் கதையில் லாஜிக் இருக்க வேண்டுமல்லவா. அது சுத்தமாக இல்லை. திரைக்கதையாவது வலிமையாக இருக்கிறதா என்றால் அதுவும் இல்லை. இரண்டாவது பாதி முழுவதும் கண்ணைக்கட்டி வேறு ஒரு உலகத்தில் விட்டது போல் இருக்கிறது. ஃபேண்டஸி கதைகளில் வலிமை, ரசிகனை தியேட்டரில் கட்டிப்போடுவதில்தான் இருக்கிறது ஆனால் இரண்டாம் உலகம் கட்டிப்போடவில்லை, தியேட்டரில் கமெண்ட் அடிக்க வைத்திருக்கிறது.
முதல் பாதி செல்வராகவன் உலகம், இரண்டாம் பாதி செல்லாத உலகம்
No comments: