ஜோத்பூருக்கு சென்று காதலி அனுஷ்காவை சந்தித்த கோலி
7–வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி வருகிற 16–ந்தேதி ஐக்கிய அரபு எமிரேட்சில் தொடங்குகிறது. போட்டி தொடங்க சில தினங்கள் இருக்கும் நிலையில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் கேப்டனும், இந்தியாவின் முன்னணி பேட்ஸ்மேனுமான வீராட் கோலி தனது காதலியான நடிகை அனுஷ்கா சர்மாவை சந்தித்துள்ளார்.
ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் சினிமா படப்பிடிப்புக்காக அனுஷ்கா சர்மா சென்று உள்ளார். 20 ஓவர் உலக கோப்பையில் வங்காளதேசத்தில் விளையாடிவிட்டு நாடு திரும்பிய கோலி ஐ.பி.எல். போட்டியில் ஈடுபடாமல் காதலியை சந்தித்து உள்ளார்.
இருவரும் ஒன்றாக சுற்றி திரிந்து தங்களது அன்பையும், மகிழ்ச்சியையும் வெளிப்படுத்திக் கொண்டனர்.
வீராட் கோலியும், அனுஷ்கா சர்மாவும் கடந்த ஒரு ஆண்டுக்கு மேலாக காதலித்து வருகின்றனர். இந்திய அணி நியூசிலாந்தில் விளையாடிய போது அனுஷ்கா அங்கு சென்றார். இருவரும் அங்கு ஒன்றாக சுற்றி திரிந்தனர்.
20 ஓவர் உலக கோப்பை போட்டி தொடங்குவதற்கு சில தினங்களுக்கு முன்பு இருவரும் கொழும்பில் உள்ள கடற்கரையில் ஒன்றாக சுற்றி திரிந்தனர். 20 ஓவர் உலக கோப்பையை இந்திய அணி கைப்பற்றாவிட்டாலும் கோலி சிறப்பாக ஆடி தொடர் நாயகன் விருதை பெற்றார்.
ஐ.பி.எல். போட்டியில் பெங்களூர் அணி தொடக்க ஆட்டத்தில் டெல்லி டேர்டெவில்சை 17–ந்தேதி சந்திக்கிறது.
No comments: