தயாரிப்பாளராய் காணமல் போய், இயக்குநராய் திரும்பி வந்தார்
2006 ஆம் ஆண்டு வெளியான கள்வனின் காதலி படத்தைத் தயாரித்தவர் லஷ்மன். எஸ்.ஜே.சூர்யா நயன்தாரா நடித்த அப்படத்தினால் பெரும் நஷ்டமடைந்த லஷ்மன், அதன் பிறகு திரையுலகைவிட்டே காணாமல் போனார். தற்போது ஒரு இயக்குநராக மீண்டும் திரையுலகுக்கு வந்திருக்கிறார் லஷ்மண். ஜெயம்ரவி - ஹன்சிகா மோத்வானி நடிக்கும் “ரோமியோ ஜூலியட்” படத்தை இயக்குவது இவர்தான். பல விளம்பரப்படங்களை இயக்கியத்துடன் எஸ்.ஜே.சூர்யாவிடம் உதவி இயக்குனராக பணியாற்றி இருக்கிறார் இவர்.
ஆர்யா நடித்த கலாபக்காதலன், ஜீவன் நடித்த மச்சக்காரன், எஸ்.ஜே.சூர்யா நடித்த நியூட்டனின் 3ஆம் விதி போன்ற படங்களை தயாரித்த எஸ்.நந்தகோபால் மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் பட நிறுவனம் தயாரிக்கும் படம் ரோமியோ ஜூலியட்.
இந்தப் படம் பற்றி இயக்குநர் லஷ்மனிடம் கேட்டபோது, “பேண்டஸியான காதல் கதை இது. ஜாலியான காதலை எப்படி ஜாலியாக சொல்கிறோம் என்பது திரைக்கதை. இந்த 2014-ல் 1947-களில் இருந்த ஒரு கவித்துவமான காதலை எதிர்பார்க்கும் ஹீரோவும், இதே 2014-ல் 2025-ல் தான் வாழ்கையை எப்படிப் பாதுகாப்பாக அமைத்துக்கொள்ள வேண்டும் என்று கால்குலேட்டிவாக யோசிக்கும் ஹீரோயின், இவர்களுக்கிடையே ஏற்பட்ட சுவாரஸ்யமான காதலை ஜாலியாக சொல்வதே இந்தப்படம்.” என்று சொன்னார்.
காதலையும் காதலர்களையும் அடையாளப்படுத்த ரோமியோ ஜூலியட் என்ற பெயரை காலம் காலமாக உபயோகப்படுத்தி வருகிறோம். ஒரு வருடத்திற்கு 300 ல் இருந்து 200 படங்களாவது காதலை மையப்படுத்தியதாக இருக்கிறது. கவித்துவமான ரோமியோ ஜூலியட் என்ற தலைப்பை எந்த படத்துக்கும் சூட்டாமல் விட்டுவைத்தது ஆச்சர்யம் தான்.
No comments: