ரஜினியும் அஜித்தும் அசைக்கமுடியாத மாஸ் ! தமிழ்சினிமாவில் குடும்பம் பின்னனியில் இல்லாமல் வந்து சிகரத்தை தொட்டவர்கள் ரஜினி மற்றும் அஜித் மட்டுமே ! இருவரும் பல விமர்சனங்களை கடந்து வெற்றிபெற்றவர்கள்
ரஜினி வரிசையாக பல மெகா ஹிட் படங்களை கொடுத்து வந்து தமிழக ரசிகர்களை தன் ஸ்டைலால் வசியபடுத்தியவர் ஆனால் படையப்பா படத்திற்கு பின் பெரிய இடைவெளி எடுத்துகொண்ட ரஜினி சொந்தமாக பாபா என்ற படத்தை இயக்கி நடித்து வெளியிட்டார் ஆனால் இந்த படம் பல அரசியல் பிடியில் சிக்கி ஒன்னுத்துக்கு உதவாத படமாய் ஆயிட்டு . இதனால் ரஜினி அவ்வளவுதான் அவர் படம் இனிமே ஓடாது அடுத்தசூப்பர்ஸ்டாரை தேர்ந்தெடுங்கள் என்று ரஜினிக்கு எதிராக ஒரு கூட்டமே எழுந்தது . ஆனாலும் மன உளைச்சல்க்கு ஆளாகாத ரஜினி சில வருடங்களுக்குபின் பி வாசு வின் சந்திரமுகி திரைப்படத்தில் நடித்தார் . இந்த படத்திற்கு போட்டியாக அடுத்த சூப்பார்ஸ்டார் பதவிக்கு ஆசைப்பட்ட விஜய் படம் சச்சின் வெளியானது. சந்திரமுகியை வென்றுவிட்டால் என் மகன்தான் சூப்பர்ஸ்டார் என்று விஜய் தந்தை சந்திரசேகரும் கூறியதுன்டு . . கூடவே உலகநாயகனின் படமும் போட்டியல் . . ஆனால் இறுதியில் தமிழ் சினிமாவிலே அதிக நாட்கள் ஓடிய ஒரே படம் என்று வரலாற்று வெற்றியை பதிவு செய்தது சந்திரமுகி . இதனால் போட்டிக்கு வந்த படங்கள் அடுத்த நாளே ஓரங்கட்டப்பட்டன .
விஸ்வரூபமெடுத்த ரஜினி வரிசையாக சிவாஜி , எந்திரன் என்று பிரம்மாண்ட வெற்றிகளை கொடுத்து என்றும் நான்தான் சூப்பர்ஸ்டார் என்று சொல்லாமல் சொல்லிவிட்டார் .
அஜித் :
இவர் ரஜினிபோல் பல வெற்றிபடங்களை தொடர்ந்து தரவில்லையென்றாலும் இவர் படத்திற்கு வரும் எதிர்பார்ப்பு ஓபனிங் வசூல் போன்று ரஜினியை தொடர்ந்து அஜித்தை தவிர வேற எந்த தமிழ்நடிகருக்கும் வரவில்லை .
ரஜினியின் பில்லா படத்தை புதிய தொழில்நுட்பத்தில் அஜித் நடித்து வெளியான போது புகழ் உச்சிக்கே சென்றார் அஜித் . காரணம் படத்தில் அஜித் ஹாலிவுட் நடிகரை போன்றே இருப்பார் . படமும் மெகா ஹிட் . ஆனாலும் அதன் பின் வந்த சில படங்கள் சறுக்கல் பின் 50வது படம் வெளியாகும் போது மன்றங்களையும் கலைத்துவிட்டார் இதனால் அஜித் அவ்வளவுதான் என்றனர் சிலர் . ஆனாலும் மங்காத்தா படம் வெளியான போது தமிழ் திரையுலகமே மூக்கின் மேல் விரல் வைத்தது. காரணம் கூடிய கூட்டம் . தமிழ்சினிமாவில் 100கோடி வசூலை தொட்ட இரண்டாவது படம் ஏற்கனவே ரஜினியின் எந்திரன்தான் 100கோடி வசூலித்தது . பின் வந்த படங்களில் பில்லா 2 சற்றே சறுக்கினாலும் ஆரம்பம் . வீரம் என்று தொடர்ந்து இரண்டு 100கோடி வசூல் படங்கள் இதனால் ரஜினிக்கு பின் அஜித்தான் என்றாகிவிட்டது தமிழ் சினிமா !
எத்தனை தடங்கல்கள் வந்தாலும் மீண்டும் அசத்தும் தமிழ் நடிகர்கள் ரஜினி அஜித் மட்டுமே !
No comments: