Header Ads

பேருந்தில் பெண்களை உரசுவதற்காகவே ஏறும் சில ஆண் மகன்களுக்கு..video

பேருந்தில் பெண்களை உரசுவதறகாகவே ஏறும் ஆண் மகனே...!!!
எங்களை உரசுவதற்கு முன் கொஞ்சம் யோசி...!

நீயும் ஒரு பெண்ணுக்கு சகோதரனாய், தந்தையாய்
மகனாய் , நிச்சயம் இருந்திருப்பதை....!
உன் சகோதரியையும் , உன் தாயையும்
உன் மனைவியையும் நிச்சயம் ஒருவன் உரசி இருப்பதை...!

நீ உரசும் போது எங்கள் மனம் அடையும் வேதனையை
புரிந்து கொள்ள உன்னவர்களிடம் கேட்டு பார்...!!!
அவர்களை ஒருவன் உரசும் போது அவர்கள் அடைந்த
வேதனையை கண்ணீருடன் கூறுவார்கள்...!
அப்போதாவது தெரியட்டும் எங்களின் வேதனை...!

நீ சீண்டும் போது அமைதி காத்தால் ஏளனமாக சிரிப்பாய்...!
சீறினால் மறுநாளே எங்கள் மானத்தோடு
விளையாட துணிவாய்...!

பெண்ணாய் பிறந்து துணிவாய் வாழும்
என்னிடம் குற்றம் இல்லையடா...!
ஆணாய் பிறந்தும் அர்த்தமற்று வாழும்
உன் பிறவியில் தான் குற்றம்...!

No comments:

Powered by Blogger.