அடுத்து அஜீத்தை இயக்குகிறார் ஏ ஆர் முருகதாஸ்?
கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த முருகதாசுக்கு முதல் படம் இயக்கும் வாய்ப்பை நிக் ஆர்ட்ஸ் மூலம் பெற்றுத் தந்தவர் அஜீத். அந்தப் படத்தில் அஜீத்துக்கு மாஸ் அந்தஸ்து தந்த 'தல' அடைமொழியை அறிமுகப்படுத்தியவர் முருகதாஸ். அந்தப் படத்துக்குப் பிறகு அஜீத் வேறு ரேஞ்சுக்குப் போய்விட்டார். முருகதாஸும் இந்திய அளவில் மிக தேடப்படும் இயக்குநராகிவிட்டார். விஜய், சூர்யா, ஆமீர்கான் போன்றவர்களை இயக்கிவிட்ட முருகதாசுக்கு மீண்டும் அஜீத்துடன் இணைய ஆசை. அதை பல பேட்டிகளில் அவரும் கூறிவிட்டார். ஆனால் அஜீத் தரப்பிலிருந்து எந்த ரியாக்ஷனும் இல்லை. இந்த நேரத்தில், முருகதாஸின் ஆசையை நிறைவேற்ற அஜீத் முடிவு செய்திருப்பதாகத் தெரிகிறது. இப்போது இந்தியில் சோனாக்ஷி சின்ஹாவை வைத்து முருகதாஸ் இயக்கும் படம் முடிந்ததும் அஜீத் படத்தை முருகதாஸ் இயக்குவார் என்கிறார்கள். இந்தப் படத்தையும் ஏஎம் ரத்னம்தான் தயாரிக்கப் போகிறாராம்!
No comments: