மரண படுக்கையில் எய்ட்ஸ் பாதித்த நடிகை -
எய்ட்ஸ் நோயால் பாதித்த தமிழ் நடிகை மரண படுக்கையில் அவதிப்படுகிறார் என்ற தகவலறிந்து தமிழ் திரையுலகமே அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளது. கமல் நடித்த 'டிக் டிக் டிக்', ரஜினி நடித்த 'ராகவேந்திரா', 'கல்யாண அகதிகள்', 'முயலுக்கு மூணுகால்' உள்ளிட்ட பல்வேறு படங்களில் ஹீரோயினாக நடித்தவர் நிஷா. நாகப்பட்டினம் மாவட்டம் நாகூரை சேர்ந்தவர். சமீபத்தில் இணையதள வாட்ஸ் அப் பகுதியில் இவரைப் பற்றிய புகைப்படத்துடன் அதிர்ச்சி தரக்கூடிய தகவல் வெளியானது. அதில், 'நாகூர் தர்கா அருகே எலும்பும் தோலுமாக உடம்பு முழுவதும் ஈ, எறும்பு மொய்க்க சுமார் ஒரு வாரமாக ஒருவர் அனாதையாக கிடக்கிறார்.
அவர் வேறுயாருமல்ல 30 ஆண்டுகளுக்கு முன் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக நடித்துக்கொண்டிருந்த நிஷா என்ற நூருன்னிசா' என அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. அதனுடன் அப்பெண் உருக்குலைந்து உயிருக்கு போராடிக்கொண்டிருக்கும் பரிதாப போட்டோக்களும் அதில் இடம்பெற்றிருந்தன. இதையறிந்த திரையுலகினர் அதிர்ச்சியில் ஆழ்ந்தனர். தேசிய மனித உரிமை ஆணையத்தின் உறுப்பினரான நீதிபதி முருகேசன் இப்பிரச்னையை தானே முன்வந்து கையில் எடுத்திருக்கிறார். பாதிக்கப்பட்ட நடிகைக்கு தேவையான சிகிச்சைக்கு ஏற்பாடு செய்ய வேண்டும். அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையின் விவரம் போன்றவற்றை 4 வாரத்துக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என நாகை மாவட்ட கலெக்டர் மற்றும் போலீஸ் சூப்பிரண்டுக்கு உத்தரவிட்டிருக்கிறார்.
No comments: