லிங்கா ரசிகர்கள் விமர்சனம்
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இன்று வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் லிங்கா.ரஜினியின் பிறந்தநாள் வெளியாகியுள்ள இப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. லிங்கா பற்றி ரசிகர்கள் சிலர் அனுப்பிய விமர்சனங்கள் உங்களுக்காக.Kumaranதலைவர் ஓபனிங் சீன்லயே மிரட்டிருக்காரு. பஞ்ச் டைலாக் எல்லாம் தெறிக்குது. அனுஷ்கா செம்ம அழகு... காசலினா... சோன் பப்டி மாதிரி இருக்காங்க சோனாக்ஷி. லிங்கா இந்த வருஷத்தோட பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன் அள்ளப்போகுது.Vickyலிங்கா - படையப்பா அளவுக்கு நச்சுனு இல்லமுத்து அளவுக்கு மோசமாவும் இல்லஇது லிங்கா படம் அல்ல தலைவர் படம் ... புரிஞ்சவன் மட்டும் லைக் போடுPrabhuThalaivar padam superrr but aana baba story mathiriyea iruku...thalaivar kaga pakkalam... superrru ....Antoneyrajகே எஸ் ரவிக்குமார் படத்துல ரஜினி நடிக்கிறார்னா அதுல புது கதையையும் புது அனுபவத்தையும் பார்க்க முடியும். ஆனால் லிங்கா படத்த பார்த்தா பழைய கதைய கொஞ்சம் மிக்ஸ் பண்ணி இந்த காலத்து ட்ரெண்ட்-க்கு குடுத்துட்டாரு போல நம்ம கே எஸ் ரவிக்குமார்.Dheenaமுதல் பாதி கொஞ்சம் மொக்க காமெடியாத்தான் இருக்குது. இண்டர்வலுக்கு அப்புறமா தான் சூடு பிடிக்குது. மக்களுக்காக வாழுறவங்கள இந்த மாதிரி தலைவர் படத்துல மட்டுந்தான் பார்க்கமுடியும்.இந்த படம் பார்க்கும் போது ரொம்ப பிடிச்சதே இடைவேளையில் போட்ட நம்ம தலயோடு டீசர் தான்.. லிங்கா அனுஷ்காவ விட என்னை அறிந்தால் அனுஷ்கா தான் ரொம்ப புடிச்சது...லிங்கா படத்தின் முதல்நாள் கொண்டாட்டம்
No comments: