கிறிஸ்தவ கோவிலில் நயன்தாராவுக்கு திடீர் திருமணம்?
நயன்தாரா ஏற்கனவே இரண்டு தடவை காதலில் தோல்வி அடைந்தவர் முதலாவதாக சிம்புவுடன் காதல் வயப்பட்டார். இருவரும் நெருங்கி பழகினார்கள். காதலை வெளிப்படையாகவும் அறிவித்தனர்.
ஆனால் திடீரென இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து விட்டார்கள். அதன் பிறகு பிரபுதேவாவுக்கும் நயன்தாராவுக்கும் காதல் மலர்ந்தது. இருவரும் திருமணம் செய்துகொள்ள திட்டமிட்டனர். இதற்காக பிரபுதேவா தனது மனைவியை விவாகரத்து செய்தார்.
பிரபுதேவா இந்து மதத்தை சேர்ந்தவர் என்பதால் தானும் கிறிஸ்தவ மதத்தில் இருந்து இந்து மதத்துக்கு மாறினார். கோவிலில் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டனர். ஆனால் கடைசி நேரத்தில் இந்த காதலும் முறிந்தது. இருவரும் பிரிந்தனர்.
காதல் தோல்விகளால் விரக்தியில் இருந்த நயன்தாரா மீண்டும் சினிமாவில் பிசியாக நடிக்க துவங்கினார். தமிழ், தெலுங்கில் நிறைய படங்களில் நடித்து வருகிறார். தற்போது விக்னேஷ் சிவன் இயக்கும் ‘நானும் ரவுடிதான்’ என்ற படத்தில் விஜய் சேதுபதி ஜோடியாக நடித்து வந்தார்.
விக்னேஷ் சிவன் ஏற்கனவே சிம்புவை வைத்து ‘போடா போடி’ படத்தை இயக்கியவர். ‘நானும் ரவுடிதான்’ படப்பிடிப்பில் நயன்தாராவுக்கும் விக்னேஷ் சிவனுக்கும் நெருக்கம் ஏற்பட்டு காதல் மலர்ந்துள்ளதாக சமீபத்தில் கிசுகிசுக்கள் வந்தன. இந்த நிலையில் இருவரும் திடீரென்று ரகசிய திருமணம் செய்து கொண்டதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.
கொச்சியில் உள்ள கிறிஸ்தவ கோவிலில் இந்த திருமணம் நடந்துள்ளது. இருவர் தரப்பில் இருந்தும் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே இதில் கலந்து கொண்டதாகவும் இருவரும் மோதிரம் மாற்றி திருமணம் செய்து கொண்டதாகவும். திருமண பரிசாக விக்னேஷ் சிவனுக்கு ஆடம்பர சொகுசு கார் ஒன்றை நயன்தாரா பரிசாக வழங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
விக்னேஷ் சிவன் நயன்தாராவைவிட ஒரு வயது இளையவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த திருமணம் குறித்து இருவர் தரப்பில் இருந்தும் இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு இல்லை.
No comments: