Header Ads

பாக். ராணுவ சீருடையில் இருந்த 20 தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர்: ஏ.கே. ஆண்டனி விளக்கம்

ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் பாகிஸ்தானின் ராணுவ சீருடையில் இருந்த 20 பேர் தாக்குதல் நடத்தினர் என்று மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ஏ.கே. ஆண்டனி விளக்கம் அளித்துள்ளார்.

நாடாளுமன்ற மக்களவையில் இன்று இச்சம்பவம் தொடர்பாக விளக்கம் அளித்த ஏ.கே. ஆண்டனி, எல்லையில் ரோந்துப் பணியில் நமது ராணுவத்தினர் ஈடுபட்டிருந்த போது எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியில் இன்று அதிகாலை இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. சுமார் கனரக ஆயுதங்களை ஏந்திய பாகிஸ்தான் ராணுவ சீருடை அணிந்த 20 தீவிரவாதிகள் இந்திய ராணுவத்தினர் மீது தாக்குதல் நடத்தினர். இதில் 5 இந்திய வீரர்கள் உயிர்த் தியாகம் செய்துள்ளனர். ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார்.

ஆத்திரமூட்டும் இத்தகைய சம்பவங்களை வன்மையாகக் கண்டிக்கிறோம். இந்திய அரசின் கண்டனமானது தூதரகங்கள் வழியாக பாகிஸ்தானுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு ஜனவரி 1-ந் தேதி முதல் ஆகஸ்ட் 5 வரையிலான காலப்பகுதியிலான ஊடுருவல் எண்ணிக்கையை நடப்பு ஆண்டு இந்த காலப் பகுதியில் ஊடுருவல் முயற்சிகள் இரு மடங்காக அதிகரித்துள்ளன.

இதேபோல் நடப்பாண்டில் 57 யுத்த நிறுத்த மீறல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் மட்டும் 19 தீவிரவாதிகளை எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டு பகுதியிலும் ஜம்மு காஷ்மீரில் பதுங்கியிருந்த போதும் ராணுவத்தினர் சுட்டுக் கொன்றுள்ளனர்.
மேலும் எல்லை தாண்டி ஊடுருவும் 17 முயற்சிகள் வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டுள்ளன என்றார்.

ஆனால் 'பாகிஸ்தான் ராணுவ சீருடை அணிந்தவர்களால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது' என்று ஆண்டனி கூறியதற்கு பாஜக மூத்த தலைவர் அருண் ஜேட்லி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது பாகிஸ்தான் பதிலளிக்க சந்தர்ப்பமாகிவிடும் என்றார்.

Tags :jammu kashmir, pakistan, soldiers, terrorists, ஜம்மு காஷ்மீர், பாகிஸ்தான், இந்தியா, தீவிரவாதிகள், தாக்குதல்

No comments:

Powered by Blogger.