Header Ads

கிரிக்கெட் வீரர்களின் புதிய இன்னிங்ஸ்

நட்சத்திர வீரர் தெண்டுல்கர் டெல்லி மேல்சபை நியமன எம்.பி.யாக கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நியமிக்கப்பட்டார். கிரிக்கெட்டில் அவர் ஆற்றிய சாதனையாக்காக அவருக்கு மேல்சபை எம்.பி. பதவி கிடைத்தது.

டெஸ்ட் போட்டியில் மட்டும் விளையாடி வரும் தெண்டுல்கர் பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் முதல் நாள் கூட்டத்தில் பங்கேற்றார். அனைவரது பார்வையும் அவரது பக்கமே இருந்தது. பல்வேறு உறுப்பினர்கள் அவருடன் கைக்குலுக்கி கொண்டனர். தெண்டுல்கர் பிரதமர் மன்மோகன்சிங் அருகே சென்று அவருக்கு கை கொடுத்தார்.

அரசியலில் குதித்த கிரிக்கெட் வீரர்கள் பற்றிய பார்வை வருமாறு:–

மறைந்த மன்சூர் அலிகான் பட்டோடி வெளிநாட்டு மண்ணில் முதல் வெற்றியை பெற்ற இந்திய கேப்டன் என்ற பெருமையை பெற்றார். காங்கிரஸ் கட்சியில் இணைந்த அவர் 1971 மற்றும் 1991–ம் ஆண்டு தேர்தலில் தோற்றார்.

50 வயதான முகமது அசாருதீன் இந்தியாவின் வெற்றி கேப்டன்களில் ஒருவராவர். 2009–ம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில் இவர் சேர்ந்தார். உத்தரபிரதேச மாநிலம் மொராதாபாத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்.பி.யாக இருக்கிறார்.

சித்து விளையாடிய காலங்களில் சிறந்த அதிரடி தொடக்க வீரர் ஆவார். தற்போது அனைவருக்கும் தெரிந்த வர்ணனையாளர் ஆவார். 2004–ம் ஆண்டு தேர்தலில் பாரதீய ஜனதா சார்பில் நின்று போட்டியிட்டு அமிர்தரஸ் தொகுதி எம்.பி.யானார்.

கவாஸ்கருடன் இணைந்து தொடக்க வீரராக விளையாடிவர் சேட்டன் சவுகான். பாரதீய ஜனதா கட்சியில் இருக்கும் இவர் எம்.பி.யாக 2 முறை தேர்ந்து எடுக்கப்பட்டார். உத்தரபிரதேச மாநிலம் அம்ரோஹா தொகுதியில் 1988 மற்றும் 1991 தேர்தலில் வெற்றி பெற்றார்.

பீகார் மாநில முன்னாள் முதல்– மந்திரி பகவத் ஜா ஆசாத்தின் மகன் கீர்த்தி ஆசாத். 1983–ம் ஆண்டு உலக கோப்பையை வென்ற அணியில் இடம் பெற்றவர். பாரதீய ஜனதா கட்சியில் சேர்ந்து தீவிர அரசியலில் ஈடுபட்டு வருகிறார். 2–வது முறையாக அவர் தற்போது எம்.பி.யாக உள்ளார்.

முன்னாள் ஆல்ரவுண்டரான மனோஜ் பிரபாகர் 39 டெஸ்ட் மற்றும் 130 ஒருநாள் போட்டியில் விளையாடியுள்ளார். 2004–ம் ஆண்டு பாரதீய ஜனதாவில் சேர்ந்தார். பாராளுமன்ற தேர்தலில் தோற்றார்.

1992–ம் ஆண்டு உலக கோப்பையை வென்ற பாகிஸ்தான் அணியின் கேப்டன் இம்ரான்கான். ஆல்ரவுண்டரான அவர் சிறந்த கேப்டனாக திகழ்ந்தார். கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு தெரிக்–இ–இன்ஷாப் என்ற கட்சியை தொடங்கி நடத்தி வருகிறார். பாகிஸ்தான் அரசியலில் முக்கிய பங்காற்றி வருகிறார்.

இலங்கை அணிக்கு உலக கோப்பையை பெற்றுக்கொடுத்த ஒரே கேப்டன் அர்ஜூன ரனதுங்கா. அந்நாட்டின் முன்னணி கிரிக்கெட் வீரர்களில் ஒருவராக திகழ்ந்த அவர் ஓய்வுக்கு பிறகு சந்திரிகாவுடன் இலங்கை சுதந்திரா கட்சியில் சேர்ந்தார். தற்போது அவர் எதிர்கட்சி தலைவராக உள்ளார்.

1996–ம் ஆண்டு இலங்கை உலக கோப்பையை வெல்ல முக்கிய பங்கு வகித்த அதிரடி வீரர் ஜெயசூர்யா. ராஜபக்சேவின் ஆளும் கட்சியில் எம்.பி.யாக உள்ளார். மேலும் அமெரிகக்காவுக்கான குட்வில் தூதராகவும் அவர் இருக்கிறார்.

1950–ம் ஆண்டுகளில் புகழ்பெற்ற கிரிக்கெட் வீரராக திகழ்ந்தவர்வர் பிராங்க் வோரெல். வெஸ்ட் இண்டீஸ்– ஆஸ்திரேலியா தொடர் அவரது பெயரில் நடத்தப்படுகிறது. ஆல்ரவுண்டரான அவர் ஓய்வு பிறகு ஜமைக்கா நாட்டு சென்ட் உறுப்பினர் ஆனார்

No comments:

Powered by Blogger.