Header Ads

பொறுப்பற்ற வெளிநாட்டு வீரர்கள்: கேப்டன் தோனி கடும் தாக்கு

மும்பை: ‘‘பஞ்சாப் அணிக்கு எதிரான ‘பிளே–ஆப்’ இரண்டாவது தகுதிச்சுற்றில் சென்னை அணியின்
வெளிநாட்டு வீரர்கள் பொறுப்பற்ற ஆட்டத்தை வெளிப்படுத்தினர்,’’ என, கேப்டன் தோனி கடுமையாக சாடினார். 
ஐ.பி.எல்., தொடரின் ‘பிளே–ஆப்’ இரண்டாவது தகுதிச்சுற்றில் சென்னை அணி 24 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணியிடம் தோல்வியடைந்தது. இதற்கு டுவைன் ஸ்மித் (7), டுபிளசி (0), பிரண்டன் மெக்கலம் (11),  டேவிட் ஹசி (1) ஆகிய நான்கு வெளிநாட்டு வீரர்களும் சொதப்பியதே முக்கிய காரணம்.
இது குறித்து சென்னை கேப்டன் தோனி கூறியது:
ரெய்னா அதிரடியாக ரன் சேர்த்த போது, உறுதியாக இலக்கை எட்டி விடலாம் என எண்ணினேன். ‘மிடில்–ஆர்டரில்’ .வெளிநாட்டு சீனியர் வீரர்கள்  பொறுப்பற்ற முறையில் விளையாடினர். இது தோல்விக்கு வழிவகுத்தது. பவுலர்கள் ரன்களை வாரி வழங்கி ஏமாற்றினர். சுழற்பந்துவீச்சாளர்கள் இன்னும் முன்னேற்றம் அடைய வேண்டும். 

No comments:

Powered by Blogger.