விண்டோஸ் 8 இயங்குதளத்தில் ஆபத்து ஏற்படும்போது நமக்கு உதவும் நண்பன்

உங்களுடைய கம்ப்யூட்டர் சரியாக ஷட் டவுண் ஆகவில்லை என்றாலோ, அல்லது, பூட் ஆக மறுத்தாலோ, சேப் மோட் இயக்கம் தான் உங்களுக்கு உதவும். சேப் மோடில், விண்டோஸ் சில குறிப்பிட்ட பைல்கள் மற்றும் ட்ரைவர்களுடன் இயங்கத் தொடங்கும்.
எந்த புரோகிராமும், சேப் மோடில், தானாக இயங்கத் தொடங்காது. உங்களுடைய கம்ப்யூட்டர் நெட்வொர்க்கில் இணையாது. இதனால், கம்ப்யூட்டரில் வைரஸ் பாதிப்பு ஏற்பட்டிருந்தால், அது நெட்வொர்க்கில் இணைக்கப்பட்டுள்ள கம்ப்யூட்டருக்குப் பரவும் வாய்ப்பு இல்லை. இதனால்,கம்ப்யூட்டர் அல்லது நம் டேட்டாவிற்குப் பாதிப்பு ஏற்படாமல், நம் பெர்சனல் கம்ப்யூட்டரின் பிரச்னயை நாம் அறியும் வாய்ப்பு அதிகமாகிறது.
சேப் மோடில் பூட் செய்வதில், விண்டோஸ் 8 தனி வழியைக் கொண்டுள்ளது. முந்தைய சிஸ்டங்களைப் போல் இதில் எளிதில் சேப் மோடுக்குச் செல்வதில்லை. விண்டோஸ் 8, சிஸ்டம் இயங்கத் தொடங்கு கையில், அதனைக் கண்காணிக்கிறது. பிரச்னைகளைக் கண்டறிந்தால், தானாகவே அது உங்களை Recovery Modeக்கு அழைத்துச் செல்கிறது.
அப்போது உங்களுக்கு Recovery. It looks like Windows didn’t load correctly’ என்ற எச்சரிக்கை செய்தி காட்டப்படும். இங்கு காட்டப்படும் விண்டோவில் advanced repair options என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். பின்னர் Troubleshoot, Advanced options, ‘Windows Startup Settings’, Restart என ஒவ்வொன்றாகச் செல்லவும். அடுத்து உங்களுடைய கம்ப்யூட்டர் ‘Advanced Boot Options’ என்னும் திரைக்குச் செல்லும். இதில் நீங்கள் Safe modeஐத் தேர்ந்தெடுக்கலாம்.
நீங்கள் விண்டோஸ் 8 சிஸ்டத்தை, நீங்களாகவே சேப் மோடில் இயக்க முடியும். இதற்கு முந்தைய சிஸ்டங்களில் இருந்ததைப் போல, msconfig சென்று அதில் தேர்ந்தெடுக்க வேண்டியதில்லை. தேடல் கட்டம் சென்று, அதில் System Configuration எனக் கொடுக்கவும். இதில் Boot டேப்பினைத் தேர்ந்தெடுக்கவும். இங்கு Safe boot என்ற டேப்பில் சென்றால், பலவகையான சேப் மோட் பூட்டிங் ஆப்ஷன்ஸ் கிடைக்கும். இதிலிருந்து நீங்கள் தேவையான ஆப்ஷனை மேற்கொள்ளலாம்.
இன்னொரு மிக எளிய, விரைவான வழியும் உள்ளது. நீங்கள் விண்டோஸ் 8 லாக் இன் ஸ்கிரீனில் இருந்தால், ரீ ஸ்டார்ட் தேர்ந்தெடுக்கவும். கம்ப்யூட்டர் ரீ ஸ்டார்ட் செய்திடத் தொடங்குகையில், ஷிப்ட் கீயை அழுத்தியவாறு இருக்கவும். உங்களுக்கு பிரச்னையைக் கண்டறியும் troubleshoot பக்கம் கிடைக்கும். இதில் சேப் மோட் செல்லும் ஆப்ஷன் கிடைக்கும். அதனைக் கிளிக் செய்து சேப் மோடுக்குச் செல்லலாம்.
சேப் மோட் சென்ற பின்னர், முந்தைய விண்டோஸ் சிஸ்டங்களில் மேற்கொண்டது போலவே, எங்கு பிரச்னை உள்ளது என ஆய்வு செய்திடலாம்
Tags ; – Safe Mode,windos,ms
No comments: