Header Ads

உடலை எப்போதும் ஆரோக்யமாக வைக்க சில குறிப்புகள்

இன்றைய நவீன யுகத்தில் காலடி எடுத்து வைத்துள்ள நம் வாழ்வில் எப்போதும் அவசர போக்கைத் தான் காண முடிகின்றது. வாழ்க்கையின் அவசரங்கள் மனிதர்களை ஓட வைத்துவிட்டது. யாரும் ஆற அமர நான்கு மணி நேரம் தியானம் செய்வதில்லை, நின்று நிதானமாய் பேசுவது இல்லை, குடும்பத்தோடு போதிய அளவு நேரம் செலவிடுவதும் இல்லை. சொல்லப்போனால், இத்தகைய வாழ்க்கை சில நிமிடங்களைச் செலவிடுவதற்குக் கூட யோசிக்க வைக்கிறது. இத்தகைய சூழலில் வாழ்வின் தேவைக்கான ஓட்டங்களோடு ஓடிக்கொண்டிருக்கும் பொழுதுகளில், என்னென்ன செய்தால் ஆரோக்கியமான வாழ்க்கையைக் காத்துக் கொள்ளலாம் என்று ஒவ்வொருவரும் அடிப்படை ஞானம் பெற்றிருத்தல் வேண்டும். ஆரோக்கியமான வாழ்வு மற்றும் மனம் ஆகியவற்றிற்கு அடையாளமே சரியான உடலமைப்பு ஆகும். சரியான உடலமைப்பு எந்த ஒரு உடல்நல கோளாறுகளையும் தருவதில்லை. ஆகவே அவ்வாறு சரியான உடலமைப்பைப் பெற நினைத்தால் ஜிம்மிற்கு செல்வது, உணவில் கவனமாய் இருப்பது போன்றவை மட்டும் போதாது. சில வாழ்க்கை முறைகளையும் மாற்றி கொள்ளுதல் அவசியம். தற்போது அந்த சரியான உடலமைப்பைப் பெறுவதற்கு சில குறிப்புகள் கொடுத்துள்ளோம். அதைப் பின்பற்றினாலே உடலை ஆரோக்கியமாகவும், ஃபிட்டாகவும் வைத்துக் கொள்ளலாம். * வாரம் மூன்று முறை மீன் சமைத்து சாப்பிட்டு வந்தால், சருமம் தொய்வுறுதல் 30 சதவீதம் குறைகிறது. ஏனெனில் மீனில் ஒமேகா-3, புரதம் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளன. இவையே சருமத்தில் உள்ள கொலாஜனுக்கு ஊட்டச்சத்தை கொடுத்து, சருமத்தை மென்மையாக வைத்திருக்கிறது. அதிலும் சால்மன் எனப்படும் மீன் வகையில் உள்ள அஷ்டக்ஷேந்தின் (Astaxanthin) எனப்படும் ஊட்டச்சத்து ஆக்சிஜனேற்ற தடுப்பானாக (Anti Oxidant) இருந்து, சருமத்திற்கு போஷாக்கு அளித்து சுருக்கங்கள் ஏற்படாமல் தடுக்கின்றது. * க்ரீன் டீயில் உள்ள கலவைகள், மூளையானது இரத்தத்தில் உள்ள சர்க்கரையை பயன்படுத்தி எண்டோர்பின் எனப்படும் சக்தியூட்டும் ஹார்மோனை சுரக்க வழி செய்கிறது. ஆகவே அடுத்த முறை புத்துணர்ச்சி இல்லாததாய் உணர்ந்தால், க்ரீன் டீயை சாப்பிடுங்கள்.

No comments:

Powered by Blogger.