பிரான்சில் அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய சுற்றுலா விமானம் அறிமுகம் (வீடியோ இணைப்பு)
பிரான்சில் அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய ஜிப்லின்(Zeppelin) சுற்றுலா விமானமானது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
பிரான்சில் ஈபிள் டவரானது மூடப்பட்டுள்ளதால் அங்கு வரும் சுற்றுலாப்பயணிகள் மிகுந்த ஏமாற்றுத்துடன் உள்ளனர். எனவே அவர்களை மகிழ்ச்சிப்படுத்தும் விதமாக இந்த சுற்றுலா விமான சேவையானது தொடங்கப்பட்டுள்ளது.
இந்த விமானமானது 75 மீற்றர் நீளம் மற்றும் 70m/ph வேகத்தில், 300 மீற்றர் உயரத்தில் பறக்கிறது. மேலும் பிரிட்டிஷ் கேத்ரீன் வாரியத்தின் (British pilot Katherine Board.) அடிப்படையில் தயாரிக்கப்பட்ட இந்த விமானத்தின் உள்ளே ஹீலியம் நிரப்பப்பட்டுள்ளது.
வருகின்ற ஒக்டோபர் மாதத்திற்குள் 7 விமானங்களை அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும் 250 யூரோ மற்றும் 650 யூரோவின் அடிப்படையில் வெரிசலிஸ் (Versailles), வெக்ஸின் தேசிய பூங்காவிற்கு (Vexin National Park) பயணிகளை ஏற்றிச் செல்வதற்கு இதன் சேவையை தொடங்கியுள்ளது.
No comments: