ராஜா ராணி விமர்சனம்
யூடியூப்பில் ஹிட் அடித்த ட்ரெய்லரைப் பார்த்தே, கதையை ஏறக்குறைய ரசிகர்கள் யூகித்திருப்பார்கள். ஏறக்குறைய யூகித்த கதைதான் ஆங்காங்கே கொஞ்சம் ட்விஸ்ட். ஆர்யா, நயன், ஜெய், தேவதை நஸ்ரியா ஆகியோரது லவ், வேறு வேறு நபர்களை காதலித்தவர்கள் திருமணம் செய்துகொண்டு, நடந்து முடிந்த திருமண வாழ்க்கையில் ஒட்டுதல் இல்லாமல் இருக்கும் இருவருடைய கதைதான் ராஜா ராணி.
ஆர்யாவுக்கும் நயன்தாராவுக்கும் திருமணம் நடக்கிறது (ஒருவழியா ஆர்யா நயன்தாரா கல்யாணத்தை காட்டிட்டாங்க). ஆனால் இருவருக்கும் ஏன் ஒத்துவராமல் இருக்கிறது என்ற விசயங்களை ப்ளாஸ்பேக்கில் காட்டுகிறார்கள். நயன்தாராவுடைய காதலன் ஜெய்யும், ஆர்யாவின் காதலி நஸ்ரியாவும் என்ன ஆனார்கள் என்று இங்கே சொல்லிவிட்டால் இது நல்ல விமர்சனமாக இருக்காது, படத்தில் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.
ஆர்யாவுக்கு செமையாக செட்டாகும் ரோல், ஜெய்க்கும்தான் (ஆனால் அடிக்கடி இதே போன்ற கதாபாத்திரங்களில் நடிக்காதீங்க பாஸ் முத்திரை குத்திடுவாங்க. அடிக்கடி அழுதாலும் நயன்தாரா செம க்யூட். அப்புறம் தேவதை நஸ்ரியா (நஸ்ரியாவுக்கு இப்படி ஒரு முடிவா? இயக்குனர் அட்லியை வன்மையாக கண்டிக்கிறோம்) அழகோ அழகு கதாபாத்திரம் அருமையோ அருமை (என்ன இப்பிடி வழியுறாங்கன்னு தப்பா நெனைக்காதிங்க ஒரு பாராட்டுதான்). சந்தானம் வழக்கம்போல், தன் இரண்டாம் இன்னிங்ஸில் அடித்து ஆட ஆரம்பித்துவிட்டார் சத்யராஜ். நயன்தாராவுக்கும் சத்யராஜுக்கும் இடையே அப்பா மகள் உறவை சித்தரித்த விதம் சூப்பர்.
படம் நன்றாக, ஜாலியாக இருக்கிறது, படம் முழுக்க திகட்டாத காமெடி இருக்கிறது, ஜிவி பிரகாஷின் இசை படத்தின் இளமைதுள்ளளுகேற்ப நன்றாக அமைந்திருக்கிறது. எல்லாம் நன்று ஆனால் இதுபோன்ற மென்மையான உணர்வுகளை கையாளும் படங்களில் முந்தைய கால மெகாஹிட் படங்களின் சாயல் இருந்தால் அது மிகப்பெரிய மற்றும் எல்லோராலும் கவனிக்கப்படும் பலவீனமாக ஆகிவிடும் என்பதை, இயக்குனர் ஏன் உணரவில்லை. இது ஒன்றைதவிர படத்தில் வேறு ஒன்றும் பெரியதாக குறைகள் சொல்ல முடியாது. புதுமுக இயக்குனர் என்றே சொல்ல முடியாத அளவிற்கு காட்சி அமைப்புகள், பாடல்கள் படமாக்கிய விதம் என பின்னி இருக்கிறார் அட்லி. ஜாலியாக ரசித்துப் பார்க்க கூடிய படம்.
Verdict : ராஜா ராணி கவர்கிறார்கள்
Tags : Raja Ran,ராஜா ராணி,ஆர்யா, நயன்தாரா, ஜெய், நஸ்ரியா, சந்தானம், சத்யராஜ்,அட்லி குமார்,ஜி.வி.பிரகாஷ்
No comments: