வீடியோ: தனுஷ்கோடி அருகே இலங்கை அகதிகள் 10 பேர்: போலீசார் விசாரணை..திடுக்கிடும் தகவல்..video

இன்று காலை ராமேசுவரம் அருகே உள்ள தனுஷ்கோடி அரிச்சமுனை கடற்கரை பகுதிக்கு 2 படகுகள் 'மர்ம'மாக வந்தன. அதில் இருந்தவர்கள் இறங்கியதும், 2 படகுகளும் மின்னல் வேகத்தில் சென்றுவிட்டன.
இது குறித்து தகவல் கிடைத்ததும் தனுஷ்கோடி போலீசார் விரைந்து சென்று அரிச்சமுனை பகுதியில் இறங்கிய 10 பேரை பிடித்து விசாரித்தனர்.அப்போது அவர்கள் இரு குடும்பத்தை சேர்ந்தவர்கள் என தெரியவந்தது. இலங்கையின் முல்லைத் தீவில் வசித்த இரு குடும்பத்தினர் என்றும் தலா ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் மற்றும் ரூ.50 ஆயிரம் கொடுத்து இரு குடும்பத்தினரும் வெவ்வேறு படகுகளிலும் அரிச்சமுனை வந்துள்ளனர். தலைமன்னாரில் இருந்து அவர்கள் படகில் வந்துள்ளதும் விசாரணையில் தெரிய வந்தது.
பிடிபட்ட 10 பேரையும் போலீசார் தனுஷ்கோடிக்கு கொண்டு வந்தனர். அவர்களிடம் போலீஸ் துணை சூப்பிரண்டு விஜயகுமார் இன்ஸ்பெக்டர் ஞானராஜ், கடலோர பிரிவு இன்ஸ்பெக்டர் குமாரவேல் மற்றும் புலனாய்வுத்துறையினர் விசாரணை நடத்தினர்.அப்போது இலங்கையில் பயங்கரவாத தடை சட்டத்தின்கீழ் சமீப காலமாக தமிழ் இளைஞர்கள் சட்ட விரோதமாக கைது செய்யப்பட்டு கொலை செய்யப்படுவதாகவும், 15 நாட்களுக்கு முன்பு 3 இளைஞர்கள் கொல்லப்பட்டதாகவும், விசாரணையில் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் எந்த ஒரு இயக்கமும் தோன்றக்கூடாது என்பதற்காக இதுபோன்று செய்வதாகவும் அதற்கு பயந்தே அகதிகளாக தப்பி வந்ததாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
No comments: