இளம்பெண்ணுக்கு செக்ஸ் தொல்லை: பாதிரியார் கைது
கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் உள்ளது மன்னுத்தி. இங்கு வசிப்பவர் ஹனிமோன் (வயது 35). இவர் பாலக்காடு பரளி என்ற இடத்தில் உள்ள தியான மையத்தில் பாதிரியாராக உள்ளார்.
இந்த மையத்துக்கு கடந்த சில நாட்களுக்கு முன் இளம் பெண் ஒருவர் வந்தார். அந்த இளம் பெண்ணிடம் நைசாக பேசிய ஹனிமோன் அவரை காதல் வலையில் வீழ்த்தினார். திருமணம் செய்து கொள்வதாக வாக்குறுதி கொடுத்தார். இதனை நம்பிய அந்த இளம் பெண் ஹனிமோனுடன் நெருக்கமாக பழகினார்.
கடந்த பிப்ரவரி 3– ந் தேதி கோவைக்கு அந்த பெண்ணை அழைத்து வந்த ஹனிமோன் இங்குள்ள லாட்ஜில் அறை எடுத்தார். இருவரும் அறையில் தங்கினர். அப்போது ஹனிமோன் இளம் பெண்ணிடம் ஆபாசமாக பேச ஆரம்பித்தார். உடல் ரீதியாக செக்ஸ் தொல்லை கொடுக்க ஆரம்பித்தார்.
இதனால் அதிர்ச்சியடைந்த இளம்பெண் அவரிடம் இருந்து தப்பினார். பாதிரியாரால் தனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுவிடுமோ? என்று பயந்து பல இடங்களில் மறைந்திருந்தார்.
தனக்கு நேர்ந்த கொடுமையை உலகிற்கு தெரியப்படுத்தவும் காம களியாட்டத்தில் ஈடுபடும் ஹனிமோனின் முகத்திரையை கிழித்தெறியவும் முடிவெடுத்தார். அதற்காக பல சமூக ஆர்வலர்களை சந்தித்து தனக்கு நேர்ந்த கொடுமைகளை கூறினார். சிலர் அதனை காது கொடுத்து கேட்காமல் தட்டிக்கழித்தனர். பலர் இளம் பெண்ணுக்கு ஆதரவு கொடுத்தனர்.
சமூக ஆர்வலர்கள் மூலம் பாலக்காடு தெற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரமோத்திடம் இளம்பெண் புகார் செய்தார். புகாரை பெற்றுக்கொண்ட இன்ஸ்பெக்டர் வழக்குப்பதிவு செய்து பாதிரியார் ஹனி மோனை கைது செய்தார். ஹனிமோன் மீது பல புகார்கள் இருப்பது விசாரணையில் தெரிய வந்தது.
No comments: