Header Ads

20 கோடி ரூபாய் அரண்மனையில் ஹன்சிகாதான் பேய் : சுந்தர்.சி

சுந்தர்.சி இயக்கி, நடித்து வரும் புதிய படம் அரண்மனை. ஹன்சிகா, ஆண்ட்ரியா, லட்சுமிராய், வினய், சந்தானம் நடிக்கிறார்கள். யு.கே.செந்தில்குமார் ஒளிப்பதிவு செய்கிறார். பரத்வாஜ் இசை அமைக்கிறார். 20 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாராகும் அரண்மனையில் பேயாக நடிக்கிறார் ஹன்சிகா.

இதுபற்றி இயக்குனர் சுந்தர்.சி கூறியதாவது: எனக்கு ரொம்ப நாளாகவே ஒரு திகில் படம் இயக்கணும்னு ஆசை. அதுக்காக நேரம் வந்ததும் ஆரம்பிச்சிட்டேன். படத்துல மெயின் கேரக்டர் ஹன்சிகாதான். சுருக்கமா சொன்னால் எல்லோரையும் மிரட்டுற பேய் அவர்தான். ஆனால் சர்ப்பரைசான கேரக்டர். அவருக்கு ஒரு வித்தியாசமான கெட்அப் இருக்கு, பார்த்தா ஹன்சிகாவா இதுன்னு மிரண்டு போயிடுவீங்க. நான் படத்துல நடிச்சிருந்தாலும் எனக்கு ஜோடி கிடையாது. ஆண்டரியா முகத்துல ஒரு மெஸ்மரிசம் இருக்கும் அதை இதுல யூஸ் பண்ணியிருக்கேன். லட்சுமிராய் கிளாமர் ஏரியாவுக்கு. சந்தானம், கோவை சரளான்னு ஒரு காமெடி பட்டாளமே இருக்கு.

படப்பிடிப்புக்கான அரண்மனையை ஐதராபாத்தில் உள்ள மணிகொண்டா என்ற இடத்தில் செட் போட்டோம் 400 தொழிலாளர்கள் 3 மாதமாக உழைத்து அரண்மனையை உருவாக்கினார்கள். கிராபிக்ஸ் காட்சிகளுக்கே சில கோடிகளை ஒதுக்கி உருவாக்கி வருகிறோம். எல்லா அம்சங்களும் நிறைந்த மிரட்டலான படமாக வளர்கிறது. தமிழ், தெலுங்கு இரண்டு மொழிகளிலும் ஒரே நேரத்தில் தயாராகிறது 

No comments:

Powered by Blogger.