5 கொலைகளை வெளிச்சத்துக்கு கொண்டு வந்த நிகழ்ச்சி
சின்னத்திரை நிகழ்ச்சிகளில் குறைந்த காலத்தில் அசுர வளர்ச்சி அடைந்தது 'சொல்வதெல்லாம் உண்மை' நிகழ்ச்சி. பிரச்னைக்குரிய இரு தரப்பினரையும் அழைத்து பேச வைத்து தீர்வு காணும் நிகழ்ச்சி. முதலில் இதனை நிர்மலா பெரியசாமி தொகுத்து வழங்கினார். இப்போது நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் தொகுத்து வழங்கிக் கொண்டிருக்கிறார். இந்த நிகழ்ச்சி மூலம் இதுவரை மூடி மறைக்கப்பட்ட 5 கொலை குற்றங்கள் வெளிச்சத்துக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
இதுகுறித்து நிகழ்ச்சியின் தொகுப்பாளர் லட்சுமி ராமகிருஷ்ணன் கூறியிருப்பதாவது: சின்ன வயதில் வரும் பாலுணர்ச்சி காதல், திருமணத்துக்கு பிறகு உள்ள கள்ளத் தொடர்புகள் இவைதான் அதிகமாக வருகிறது. அவைகள்தான் கடைசியில் கொலையிலும் போய் முடிகிறது. தனிப்பட்ட மனிதர்களின் விஷயத்தை இப்படி பொது நிகழ்ச்சியில் விவாதிக்கலாமா? என்ற விமர்சனம் ஆரம்பத்தில் இருந்தது. நம்மோட பிரச்னையை யாராவது கேட்க மாட்டாங்களான்னு ஆதங்கப்படுறவங்களுக்கான நிகழ்ச்சிதான் இது.
வருகிற இரண்டு தரப்பும் அவுங்க பக்கம் நியாயம் இருக்கிறதா நினைச்சிக்கிட்டுதான் வர்றாங்க. ஆனா நாங்க பண்ற கவுன்சிலிங்ல உண்மை வெளிவந்துவிடுகிறது. தன்னோட காதலுக்கு தடையா இருந்த அப்பா செய்த கொலையை ஒரு மகள் காட்டிக் கொடுத்தார், தன்னோட கள்ளக்காதலனுக்கு நடக்கப்போற கல்யாணத்தை தடுக்க வந்த பெண், தானும் கள்ளக்காதலனும் சேர்ந்து கணவனை கொலை செய்ததை சொல்லிவிட்டார். சிலர் குற்ற உணர்ச்சி தாங்கமால் உண்மையை சொல்லியிருக்காங்க. இதனால மறைக்கப்பட்ட பல உண்மைகள் வெளிவந்திருக்கு. பாதிக்கப்பட்டவங்களுக்கு தீர்வும் கிடைச்சிருக்கு என்கிறார் லட்சுமி ராமகிருஷ்ணன்.
No comments: