இந்திய தேர்தல் பாஜக கூட்டணி 332 தனிப் பலத்துடன்! 37 ஆசனங்களைக் கைப்பற்றியது அதிமுக!!
இந்தியாவின் நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகிக்கொண்டு இருக்கின்றன. அந்தவகையில் பாரதிய ஜனதாக் கட்சி முன்னிலை வகிக்கின்றது. தமிழகத்தில் அண்ணா திரவிட முன்னேற்றக்கழகம் அதிகளவு ஆசனங்களைக் கைப்பற்றி வெற்றிபெற்றுள்ளது. விருதுநகரில் போட்டியிட்டுள்ள வைகோ அவர்கள் பின்னடைவைச் சந்தித்துள்ளார். அதேபோன்று விஜயகாந்தும் பின்னடைவைச் சந்தித்துள்ளார். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவனும் பின்னடைவைச் சந்தித்துள்ளார்.
விருதுநகரில் மதிமுக 3-ம் இடத்தில் மூன்றாவது இடத்தில் உள்ளது. மதிமுக வேட்பாளர் வைகோ 12,254 வாக்குகள் பெற்றுள்ளார். அதிமுக வேட்பாளர் டி.ராதாகிருஷ்ணன் 23494 வாக்குகள் பெற்று முன்னிலை வகிக்கிறார்.
தமிழகத்தில் அதிமுக 37 தொகுதிகளிலும், பா.ஜ.க 1 தொகுதியிலும், பா.ம.க 1 தொகுதியிலும், காங்கிரஸ் 1 தொகுதியிலும் (புதுச்சேரி தொகுதியில்) ஆசங்களைக் கைப்பற்றி வெற்றியடைந்துள்ளது.
இந்தியா முழுவதும்
பா.ஜ.க கூட்டணி – 332 ஆசனங்கள்
காங்கிரஸ் கூட்டணி – 65 ஆசனங்கள்
ஏனையகட்சிகள் – 146 ஆசனங்கள்
கட்சி ரீதியான ஆசனங்கள்
பா.ஜ.க – 278 ஆசனங்கள்
காங்கிரஸ் – 51 ஆசனங்கள்
திரிணாமுல் காங்கிரஸ் – 33 ஆசனங்கள்
சமாஜ்வாதி – 9 ஆசனங்கள்
தெலுங்கானா ராஷ்டீரிய சமீதி – 10 ஆசனங்கள்
அதிமுக – 37 ஆசனங்கள்
தமிழகம் முழுவதும்
அ.தி.மு.க – 37 ஆசனங்கள்
பா.ஜ.க – 1 ஆசனம்
காங்கிரஸ் – 1 ஆசனம்
பா.ம.க – 1 ஆசனம்
தி.மு.க – 0
ம.தி.மு.க – 0
தே.தி.மு.க – 0
No comments: