எதிர்கட்சி இல்லாத லோக்சபா
பா.ஜ.,வின் பெரும் வெற்றி எதிரொலியாக, லோக்சபாவில் அங்கீகரிக்கப்பட்ட எதிர்கட்சி இல்லாத சூழல் உருவாகி உள்ளது. 1984ல் இந்திரா படுகொலைக்குப் பிறகு நடந்த தேர்தலில் காங்கிரஸ் 415 இடங்களைப் பிடித்தது. அப்போது தேவையான இடங்கள் இல்லாத நிலையில், தெலுங்கு தேசம் கட்சி அங்கீகரிக்கப்படாத எதிர்கட்சியாக இருந்தது. ஆனால் இன்றைய சூழ்நிலையில் லோக்பால் அமைக்கப்படுவதற்கும் மத்திய கண்காணிப்பு கமிஷனரை நியமிக்கவும் லோக்சபா எதிர்கட்சித் தலைவர் தேவையென சட்டம் கூறுகிறது. அங்கீகரிக்கப்பட்ட எதிர்கட்சித் தலைவர் இல்லையென்றால், மத்திய அரசால் சில முக்கிய முடிவுகளை எடுக்க இயலாது.
No comments: