நிச்சயதார்த்தம் நடந்த பிறகு பலாத்காரம் செய்துவிட்டு திருமணம் செய்ய மறுப்பு
கோவை : திருமண நிச்சயதார்த்தம் நடந்த பிறகு பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு திருமணம் செய்ய மறுத்த இன்ஜினீயர் மீது இளம்பெண் புகார் செய்துள்ளார்.கோவை பீளமேடு தண்ணீர்பந்தல் பகுதியை சேர்ந்தவர் தங்கவேல். இவரது மகள் ஸ்ரீதேவி சுவாத்மிகா (23). பேஷன் டிசைனர். இவர், பேரூர் அனைத்து மகளிர் போலீசில் அளித்துள்ள புகாரில் கூறியிருப்பதாவது:எனக்கும் (ஸ்ரீதேவி சுவாத்மிகா) கோவை சுண்டக்காமுத்தூரை சேர்ந்த ஜெயராஜ் மகன் ஆர்கிடெக் இன்ஜினீயர் பாலாஜி (26) என்பவருக்கும் வருகிற 1-6-2014 அன்று திருமணம் பேசி நிச்சயிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், கடந்த மாதம் ஒருநாள் தனது தாய்க்கு உடல்நிலை சரியில்லை, கவனிக்க யாரும் இல்லை எனக்கூறி தனது வீட்டுக்கு வரும்படி என்னை பாலாஜி அழைத்தார். அதை நம்பி அங்கு சென்றேன். அப்போது ஆசைவார்த்தை கூறி என்னிடம் உறவு கொண்டார்.
தற்போது 50 பவுன் நகை, ரூ.50 லட்சம் கொடுத்தால்தான் திருமணம் செய்து கொள்வேன் என மிரட்டுகிறார். இதற்கு அவரது பெற்றோர் துணையாக இருக்கிறார்கள். இவர்கள் அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என புகார் மனுவில் கூறியுள்ளார்.இதைத்தொடர்ந்து, பாலாஜி, அவரது பெற் றோர் ஜெயராஜ்-தனலட்சுமி உள்பட 6 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகிறார்கள்.
No comments: