Header Ads

மோடி சுனாமி: 60 ஆண்டுகால காங்கிரஸ் ஆதிக்கத்தை தூக்கி வீசியது

புதுடில்லி: நாடு முழுவதும் மோடி அலை கடுமையாக வீசியுள்ளது; இதனால் 65 ஆண்டு கால காங்கிரஸ் ஆதிக்கம் தூக்கி எறியப்பட்டுள்ளது. 60 இடங்களைக் கூட காங்கிரஸ் கைப்பற்றுமா என்ற சந்தேகம் எழுந்துள்ள நிலையில், இதுவரை வெற்றி பெறாத தமிழ்நாடு, மேற்கு வங்கம், அசாம், போன்ற மாநிலங்களில் பாஜ., காலூன்றியுள்ளது. மேலும் ராஜஸ்தான், குஜராத், டில்லி, உத்தராஞ்சல், கோவா ஆகிய மாநிலங்களில் பா.ஜ., அனைத்து தொகுதிகளையும் கைப்பற்றி உள்ளது.
தோல்வி கண்ட தலைவர்கள்: இந்த தேர்தலில் கடந்த காங்கிரஸ் ஆட்சியின் பெரும்பாலான அமைச்சர்கள் தோல்வி கண்டுள்ளனர். கபில் சிபல், பரூக அப்துல்லா, சச்சின் பைலட் போன்றவர்களும் ஆதார் அட்டை ஆணையத் தலைவர் நந்தன் நீலகேணி, கிரிக்கெட் வீரர் அசாருதின், பா.ஜ.,விலிருந்து விலகிய ஜஸ்வந்த் சிங், தமிழகத்தில் வைகோ, மணி சங்கர் ஐயர், ராசா, கார்த்தி சிதம்பரம் ஆகியோரும் தோல்வி கண்டவர்களில் முக்கியமானவர்கள். 

கடந்த ஒன்றரை மாத காலமாக நடந்து முடிந்த தேர்தல் இறுதி முடிவுகள் இன்று வெளியாகி வருகின்றன. இதற்கான ஓட்டு எண்ணிக்கை நாடு முழுவதும் காலை 8 மணிக்கு துவங்கி நடந்து வருகிறது. ஆரம்பம் முதலே நாடு முழுவதும் 340 



க்கும் மேற்பட்ட தொகுதிகளில் பா.ஜ., தலைமையிலான தே.ஜ., கூட்டணி முன்னிலை வகித்து வருகிறது. காங்., 70 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. ஏனையகட்சிகள் 100 க்கும் மேற்பட்ட தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது. அ.தி.மு.க,. 35 க்கும் மேற்பட்ட தொகுதிகளிலும் இதற்கு அடுத்தப்படியாக மம்தா கட்சியான திரிணாமுல் காங்., 32 இடங்களிலும் முன்னிலை வகித்து வருகிறது. தமிழகத்தில் பா.ஜ., வுக்கு ஒரு ( நாகர்கோவில் ) இடமும், பா.ம.க,வுக்கு (தர்மபுரியும் ) ஒரு இடமும் முன்னிலை வகிக்கிறது. தே.மு.தி.க.,வுக்கு ஒரு இடம் கிடைக்கவில்லை. தேசிய அளவில் மாயாவதி கட்சி, இடதுசாரிகள் கட்சிக்கு மிக பெரிய தோல்வி கிடைத்துள்ளது. 
காங்., துணை தலைவர் ராகுல் கூட பா.ஜ., வேட்பாளரை விட குறைந்த ஓட்டுக்கள் பெற்று
முன்னும், பின்னுமாக இருந்து வருகிறார்.பா.ஜ., பிரதமர் வேட்பாளர் மோடி போட்டியிட்ட
வதோதரா, வாரணாசி தொகுதிகளில் பெரும் வெற்றி பெற்றுள்ளார்.
எதிர்பார்த்தது போலவே, மீடியாக்களின் கருத்துக்கணிப்பின்படி மோடி மெஜாரிட்டியுடன் ஆட்சியை பிடிக்கிறார். நினைத்தது போலவே 
மோடி பிரதமராகிறார்.

எதிர்கட்சி இல்லாத லோக்சபா: பா.ஜ.,வின் இந்த பெரும் வெற்றி எதிரொலியாக, லோக்சபாவில் அங்கீகரிக்கப்பட்ட எதிர்கட்சி இல்லாத சூழல் உருவாகி உள்ளது. 1984ல் இந்திர படுகொலைக்குப் பிறகு நடந்த தேர்தலில் காங்கிரஸ் 415 இடங்களைப் பிடித்தது. அப்போது தேவையான இடங்கள் இல்லாததால், தெலுங்கு தேசம் கட்சி அங்கீகரிக்கப்படாத எதிர்கட்சியாக இருந்தது. ஆனால் இன்றைய சூழ்நிலையில் லோக்பால் அமைக்கப்படுவதற்கும் மத்திய கண்காணிப்பு கமிஷனரை நியமிக்கவும் லோக்சபா எதிர்கட்சித் தலைவர் தேவையென சட்டம் கூறுகிறது. அங்கீகரிக்கப்பட்ட எதிர்கட்சித் தலைவர் இல்லையென்றால், மத்திய அரசால் சில முக்கிய முடிவுகளை எடுக்க இயலாது. 

No comments:

Powered by Blogger.