சென்னை சூளையில் அடுக்குமாடி குடியிருப்பில் விபசாரம்; துணை நடிகை கைது
சென்னை சூளையில் அடுக்குமாடி குடியிருப்பில் விபசாரம் செய்ததாக துணை நடிகை ஒருவர் கைது செய்யப்பட்டார். அவரால் விபசாரத்தில் தள்ளப்பட்ட அசாம் மாநில இளம்பெண் மீட்கப்பட்டார்.
அதிரடி சோதனை
சென்னை சூளை அவதான பாப்பையர் தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில், கவுரி(வயது 35) என்பவர் சமீபத்தில் வாடகைக்கு குடி வந்தார். அவர் தான் சினிமாவில் துணை நடிகை தொழில் செய்வதாக கூறினார். சினிமாவுக்கு துணை நடிப்பு தொழிலுக்கு ஆட்களை அனுப்பும் தரகர் வேலையும் செய்வதாக அந்த பகுதி மக்களிடம் கூறி வந்தார்.
அவர் வசித்த வீட்டுக்கு இரவில், நிறைய ஆண்கள் வந்துபோனது, அக்கம் பக்கத்தினருக்கு சந்தேகத்தை உண்டாக்கியது. இதுபற்றி போலீசாருக்கு ரகசிய தகவல் கொடுக்கப்பட்டது. வேப்பேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரபு தலைமையில் போலீஸ் படையினர், குறிப்பிட்ட அடுக்குமாடி குடியிருப்பு வீட்டில் அதிரடியாக புகுந்து சோதனை நடத்தினார்கள். சோதனையில் அங்கு, விபசாரம் நடப்பது கண்டறியப்பட்டது.
கவுரி கைது
அசாம் மாநிலத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் அங்கு விபசாரத்தில் ஈடுபடுத்தப்பட்டிருந்தார். அந்த இளம்பெண்ணை போலீசார் மீட்டனர். விபசார தொழில் நடத்தியதாக கவுரி கைது செய்யப்பட்டார். கவுரி கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவர். கன்னட படங்களில் துணை நடிகையாக நடித்துள்ளதாக போலீசாரிடம் தெரிவித்தார். நேற்று மாலை அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டார்.
No comments: