Header Ads

நடிகை ரம்யா தோல்வி: காங். கட்சியினரே தோற்கடித்ததாக புகார்

தேர்தலில் தோல்வி அடைந்ததால் ரம்யா மீண்டும் நடிக்க வருகிறார். தமிழில் குத்து, பொல்லாதவன், வாரணம் ஆயிரம், சிங்கம்புலி உள்ளிட்ட படங்களில் கதாநாயகியாக நடித்தவர் ரம்யா.

இவர் கர்நாடக காங்கிரஸ் கட்சியில் இணைந்து அரசியலில் ஈடுபட்டார். கடந்த வருடம் மாண்டியா தொகுதியில் நடந்த இடைத்தேர்தலில் போட்டியிட்டு வென்றார். இதையடுத்து அரசியல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டார். அதே நேரம் காங்கிரஸ் கட்சிக்குள்ளும் இவருக்கு எதிர்ப்பு கோஷ்டிகள் முளைத்தன.

பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட ரம்யாவுக்கு மீண்டும் டிக்கெட் வழங்கப்பட்டது. ஆனால் தேர்தலில் அவர் தோல்வி அடைந்தார். தன்னை எதிர்த்து போட்டியிட்ட மதசார்பற்ற ஜனதா தள வேட்பாளர் புட்டராஜுவிடம் 4 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். இதனால் ரம்யா அதிர்ச்சி அடைந்துள்ளார். காங்கிரஸ் கட்சியினரே தனக்கு எதிராக வேலை பார்த்து தோற்கடித்து விட்டனர் என்று குற்றம் சாட்டியுள்ளார்.

தேர்தல் தோல்வி காரணமாக மீண்டும் சினிமாவுக்கு வருகிறார். ஏற்கனவே இவர் நடித்த மூன்று கன்னட படங்கள் ரிலீசுக்கு தயாராக உள்ளன.

No comments:

Powered by Blogger.