Header Ads

திருமணம் செய்வதும், தள்ளிப் போடுவதும் தனிப்பட்ட விஷயம் - அமலா பால்

அமலா பால் சினிமாவுக்கு வந்து சில வருடங்களே ஆகிறது. 21 வயதாகும் அவர் இப்போதே பொது விஷயங்களில் தனது கருத்துக்களை சொல்ல ஆரம்பித்திருக்கிறார். குறிப்பாக நடிகைகள் திருமணத்தை தள்ளிப் போடுவது பற்றியும், திருமணத்துக்குப் பிறகு நடிக்க முடியாமல் பலர் முடங்கிப் போவது குறித்தும் அவர் தெ‌ரிவித்த கருத்துக்கள் அவரை குட்டி குஷ்புவாக அடையாளம் காட்டுகிறது.


"ஒருவர் திருமணம் செய்து கொள்வதும் செய்யாமல் இருப்பதும் அவ‌ரின் தனிப்பட்ட தேர்வு. சினிமாவுக்கு அதிக முக்கியத்துவம் தருவதால்தான் சில நடிகைகள் திருமணத்தை தள்ளிப் போடுகிறார்கள். திருமணம் செய்தால் நடிக்க வாய்ப்பில்லாமல் போகும் என்ற பயத்தினால் அல்ல."

கேரளாவைப் பொறுத்தவரை திருமணத்துக்குப் பிறகு சினிமாவில் நடிப்பவர்களின் எண்ணிக்கை குறைவு. கோபிகா, நவ்யா நாயர், மஞ்சுவா‌ரியர் என முன்னணி நடிகைகள் யாரும் திருமணத்துக்குப் பிறகு நடிக்கவில்லை. கோபிகா நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஒரேயொரு படத்தில் மட்டும் நடித்தார். 

"நாம் வசிப்பது இந்தியாவில். திருமணத்துக்குப் பிறகு நடிப்பதென்றால் குடும்பத்தின் ஆதரவு நிறைய தேவைப்படுகிறது. நிறைய குடும்பங்கள் திருமணத்துக்குப் பிறகு தங்கள் மகளோ, மருமகளோ சினிமாவில் நடிப்பதை விரும்புவதில்லை. அதனால்தான் பல நடிகைகளால் திருமணத்துக்குப் பிறகு நடிக்க முடியாமல் போகிறது."

நடிகைகளுக்கு இருக்கும் இன்னொரு பிரச்சனை, இளவயது தாண்டிய பிறகு வாய்ப்புகள் அவர்களுக்கு கிடைப்பதில்லை. இதைப் பற்றி அமலா பாலின் கருத்து என்ன?

"இன்றைக்கு 35 வயதிலும் நடிகைகள் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். வித்யா பாலன் திருமணத்துக்குப் பிறகும் நாயகியாக நடிக்கவில்லையா. இப்போதெல்லாம் நடிகைகள் தங்களுக்கு விரும்புகிறவரை படத்தில் நடிக்கிறார்கள். திருமணத்துக்குப் பிறகு நடிக்காமலிருப்பது அந்தந்த நடிகைகளின் பர்சனல் விருப்பம் என்றுதான் நினைக்கிறேன்."

ஆரம்ப காலத்தில் புதுமுகங்களுடனும், இரண்டாம்கட்ட நடிகர்களுடன் நடித்து வந்த அமலா பால் இப்போது முன்னணி நடிகர்களைத் தவிர யாருடனும் ஜோடி சேர்வதில்லை. விஜய், தனுஷ், மோகன் லால், ராம் சரண் தேஜா... என்றுதான் இருக்கிறது அவ‌ரின் சாய்ஸ்.

"முன்னணி நடிகர்களின் படங்களில் நான் நடிப்பது உண்மைதான். ஆனால் நல்ல ஸ்கி‌ரிப்டாக இருந்தால் உடன் நடிப்பது யார் என்று நான் கவலைப்பட மாட்டேன். ஸ்கி‌ரிப்ட்தான் முதலில், மற்றதெல்லாம் பிறகுதான்."

சினிமாவில் இப்போதுதான் நிறைய விஷயங்கள் கற்றுக்கொள்வதாக அமலா பால் கூறுகிறார். ஒவ்வொரு நாளும் பல விஷயங்களை தெ‌ரிந்து கொள்கிறாராம். அப்படி அவர் தெ‌ரிந்து கொண்டது என்ன?

"என் பர்சனல் வாழ்க்கையுடன் புரபஷனல் வாழ்க்கையை எப்போது‌ம் மிக்ஸ் பண்ண நான் விரும்பியதில்லை. என்னுடைய வயதுக்குண்டான எதையும் நான் என்னுடைய சினிமா கே‌ரியருக்காக இழக்க தயாராக இல்லை. என் வயதுள்ள மற்ற பெண்கள் செய்யும், அனுபவிக்கும் எல்லாவற்றையும் நானும் செய்ய வேண்டும் என்பது என்னுடைய ஆசை."

நடிகைகள் பொதுவாக சலித்துக் கொள்ளும் விஷயம், திரையில் தெ‌ரிவதைப் போலவே எப்போதும் தங்களை காட்டிக் கொள்ள வேண்டிய சிரமத்தைதான். அமலா பாலுக்கு எப்படி?

"ரசிகர்கள் திரையில் நாங்கள் எப்படி தெ‌ரி‌கிறோமோ அப்படிதான் நிஜ வாழ்க்கையிலும் பார்க்க ப்‌ரியப்படுகிறார்கள். அதனால் விழாக்களுக்கு வரும் போது என்னுடைய தோற்றத்தில் அதிக சிரத்தை எடுத்துக் கொள்வேன். அதுவே குடும்பத்துடன், நண்பர்களுடன் என்றால் அதுபற்றி கேர் செய்து கொள்வதில்லை. அவர்களுக்கு நம்முடைய தோற்றத்தை தாண்டி நம்மை பற்றி அதிகம் தெ‌ரியு‌ம்."

No comments:

Powered by Blogger.