Header Ads

பாலச்சந்திரனின் படுகொலைக்கு நீதி கேட்டு ஐ.நா மனித உரிமைக் கூட்டத்தில் நாடுகடந்த தமிழீழ அரசின் இணை அமைச்சர் சீற்றம்

பாலச்சந்திரனின் படுகொலைக்கு நீதி கேட்டு, ஐ.நாடுகள் மனித உரிமைச் சபையின் 24வது கூட்டதொடரில் நாடுகடந்த தமிழீழ அரசின் இணை அமைச்சர் மைக்கல் கொலின்ஸ் கடும் சீற்றத்தோடு வாதாடியுள்ளார்.

24 வது ஐ.நா மனித உரிமைச் சபையின் கூட்டதொடர் செப்டெம்பர் 09ம் திகதி முதல் 27ம் திகதி வரை ஜெனீவாவில் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தை லிபரேசன் அமைப்பு ஒழுங்கு செய்திருந்தது.

இதில் கலந்து கொண்ட நாடுகடந்த தமிழீழ அரசின் கல்வி உடல்நல மற்றும் விளையாட்டு இணை அமைச்சர் ச.மைக்கல் கொலின்ஸ், “தென் ஆசியாவில் மனித உரிமை” எனும் விவாதத்தின் கேள்வி நேரத்தின் போது கடும் சீற்றத்தோடு, ஐ.நா. முக்கிய பிரதிநிதிகள் மற்றும் பன்நாட்டு இராஜதந்திரிகள் முன் இரண்டு கேள்விகளை முன்னிறுத்தி வாதாடியுள்ளார்.

அவர் தனத உரையில்,

மாண்புமிகு அவை தலைவர் அவர்களே மற்றும் ராஜதந்திரிகளே நண்பர்களே மைக்கல் கொலின்ஸ் ஆகிய நான் யாழ்ப்பாண பல்கலைகழக முன்னாள் விரிவுரையாளரும், நாடுகடந்த அரசின் தற்போதைய கல்வி உடல்நல மற்றும் விளையாடு இணை அமைச்சரும் ஆவேன்.

தென் ஆசியாவில் மனித உரிமை பல நாடுகளில் மறுக்கபடுவதாக பல இராஜதந்திரிகள் உரை நிகழ்த்தி நீதி கேட்டார்கள், நானும் எனது மக்களுக்கு நீதி கேட்டு இங்கே வந்துள்ளேன்.

நான் யாழ்ப்பாணம் செயின்ட் பற்றிக்ஸ் கல்லூரியில் கல்விகற்றவன். எனது அதிபராக வண.பிதா.மைக்கல் ஜோசப் அவர்கள் கடமையாற்றினார்.

2009 மே இறுதி யுத்தத்தின் பொது வெள்ளைக்கொடி உடன், வெள்ளை சீருடையுடன் இலங்கை இராணுவத்திடம் சரணடைந்தார். இன்றுவரை அவர் பற்றி எந்த தகவலும் இல்லை.

அத்தோடு சிறுவன் பாலச்சந்திரன், இலங்கை இராணுவத்தால் உணவு வழங்கப்பட்டபின் சுட்டுக்கொல்ல பட்டுள்ளார். இந்த குழந்தை என்ன செய்தது.

இதற்கு நீதி வேண்டும் மனித உரிமை பற்றி பேசுகின்றீர்கள் நாங்களும் மனிதர்கள் தான். அதனால் தான் இந்த விடயங்களை இங்கு முன் வைக்கின்றேன் எமக்கு நீதி வேண்டும் என வாதாடினார்.

சிறுவன் பாலச்சந்திரனின் படுகொலை செய்யபட்ட புகைப்படத்தை மைக்கல் கொலின்ஸ் அவர்கள் துணிந்து, இலங்கை பிரதிநிதிகள் இந்திய பன்னாட்டு பிரதிநிதிகள் முன் சபையில் உயர்த்தி காட்டி நீதி கேட்ட பொது, வேற்று நாட்டு இராஜதந்திரிகள் பாலச்சந்திரனின் படுகொலை வெட்ககேடானது என கூக்குரல் இட்டது குறிப்பிடத்தக்கது.

No comments:

Powered by Blogger.