Header Ads

பிரபல நடன இயக்குனர் ரகுராம் மாஸ்டர் இன்று காலமானார்

பிரபல நடன இயகுனர் ஆர்.ரகுராம் (64) இன்று மாரடைப்பால் மரணமடைந்தார். சென்னை மாகலிங்கபுரத்தில் வசித்து வந்த அவர் கடந்த சில நாட்களாக நோய்வாய்பட்டிருந்தார். இவர் எம்.ஜி.ஆர். சிவாஜி, ரஜினி காந்த் மற்றும் கமல்ஹாசனின் பாடல்களுக்கு நடன இயக்குனராக பணியாற்றியுள்ளார்.

தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள உள்ளிட்ட சுமார் 1000 பாடல்களுக்கு அவர் நடன இயக்குனராக பணியாற்றியுள்ளார்.

ஒரு நடனக்கலைகள் தெரிந்த குடும்பத்தில் இருந்து வந்தவரான ரகுராமை, சினிமாத்துறையினர் செல்லமாக ரகுராம் மாஸ்டர் என்றே அழைத்தனர். நடிகரான அவர் கமல்ஹாசனின் சூப்பர்ஹிட் படமான தசவதாரம் உள்ளிட்ட சில படங்களில் அவருடன் சேர்ந்து நடித்துள்ளார்.

நடன இயக்குநர்கள் உள்ளிட்ட சினிமா துறையினர் அவரது உடலுக்கு மலரஞ்சலி செலுத்திவருகின்றனர். இவரது மரணம் சினிமாத்துறைக்கு மிகப்பெரிய இழப்பு என்றும் அஞ்சலி செலுத்தியவர்கள் கூறினர். வரும் திங்களன்று அவரது உடல் அடக்கம் செய்யப்படும் என்று அவருடைய குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

இவருக்கு கிரிஜா என்ற மனைவியும், நடிகை காயத்ரி, சுஜா என்ற இரு மகள்களும் உள்ளனர். இவர்கள் தற்போது நடன இயக்குனர்களாக பணியாற்றி வருகிறார்கள்.


english

Dance master Raghuram passed away this afternoon (30th November, 2013) at the age of 64. The choreographer was suffering from a medical ailment to which he succumbed to earlier today.

Raghuram master has been with the industry for over 50 years and has worked in over 1500 films across different film industries. His daughters Suja Raghuram and Gayathri Raghuram are dancers too. 

lankawoods expresses deepest condolences to the bereaved family and close ones of the dance master. 

No comments:

Powered by Blogger.