Header Ads

பிரபாகரன் - கருணா பிளவு ஏற்படாமல் இருந்திருந்தால், ஈழப் போராட்டம் வெற்றி பெற்றிருக்குமா?

ஈழப் போராட்டத்தின் தோல்விக்கு கருணா விலகலை மட்டும் காரணமாகச் சொல்ல முடியாது. பிரபாகரனை விட்டுப் பிரியாமல் இருந்திருந்தால், கருணா நிலைமை இன்னும் சிக்கலாகி இருக்கும். இவ்வாறு ஜூனியர் விகடனில் வெளிவரும் கழுகார் பதில்கள் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது
கழுகார் பதில்கள் தொடரில் வரும் இலங்கை தொடர்பான வினாக்களும் - பதில்களும் வருமாறு,

பிரபாகரனுக்கும் கருணாவுக்கும் பிளவு ஏற்படாமல் இருந்திருந்தால், ஈழப் போராட்டம் வெற்றி பெற்றிருக்குமா?

ஈழப் போராட்டத்தின் தோல்விக்கு கருணா விலகலை மட்டும் காரணமாகச் சொல்ல முடியாது. கிழக்கு மாகாணத்தில் விடுதலைப் புலிகள் அமைப்பின் முக்கியத் தளபதியாக இருந்த கருணா மீது பாலியல் குற்றச்சாட்டு சொல்லப்பட்டு, அவருக்கு தண்டனை விதிக்கப்படும் சூழ்நிலை ஏற்பட்டது.

அதற்கான இறுதி விசாரணைக்காக கிழக்கு மாகாணத்தில் இருந்து முல்லைத்தீவுக்கு பிரபாகரனால் அழைக்கப்பட்டார். மரணம் நிச்சயம் என்று அறிந்ததால், முல்லைத்தீவுக்கு வராமல் கொழும்புவுக்குத் தப்பினார் கருணா.

அன்றைய ஜனாதிபதியாக இருந்த ரணில் விக்கிரமசிங்கவின் அமைச்சரவையில் அங்கம் வகித்த அமைச்சர் ஒருவருக்கும் கருணாவுக்கும் இரகசியத் தொடர்பு ஏற்கெனவே இருந்தது.

அதனால் கருணா தன் உயிரைக் காப்பாற்றிக் கொண்டார். கருணாவுக்குப் பிறகு கிழக்கு மாகாணத்தை ரமேஷ் தலைமை வகித்து நடத்தினார்.

போர் உக்கிரம் அடைந்த பிறகு ரமேஷ் தரப்புப் போராளிகளும் வடக்கு மாகாணத்துக்கு வரவழைக்கப்பட்டார்கள். ரமேஷ் சிங்கள இராணுவத்தால் சித்திரவதை செய்யப்பட்ட வீடியோ சமீபத்தில் வெளியானது. 
பிரபாகரனை விட்டுப் பிரியாமல் இருந்திருந்தால், கருணா நிலைமை இன்னும் சிக்கலாகி இருக்கும் என்று வேண்டுமானால் சொல்லலாம்.

இலங்கைப் பிரச்சினையில் இரட்டை வேடம் போடுபவர் கருணாநிதியா... ஜெயலலிதாவா?

இரண்டு பேருமேதான்!

ஐயகோ இசைப்பிரியாவைக் கொன்றுவிட்டார்களே... பாலகன் பாலச்சந்திரனைக் கொன்றுவிட்டார்களே.. என, இன்று பதறும் கருணாநிதிதான், அந்தப் போர் நடந்த காலத்தில் வெளியான கொலைகாரப் படங்களைப் பார்த்து, இது இப்போது எடுத்தவையா... பழைய படங்களா? என்று கேட்டார்.

தமிழர்களைக் கொன்றவர்களை போர்க் குற்றவாளிகளாகக் கருதி விசாரிக்க வேண்டும் என்று இன்று தீர்மானம் போடும் ஜெயலலிதாதான், அன்று போர் நடந்து கொண்டு இருக்கும்போது, போர் என்று நடந்தால் மனிதர்கள் சாகத்தான் செய்வார்கள் என்று சொன்னார்.

உயிருக்குத் துடித்தபோது தலையைத் திருப்பிக்கொண்டு இருந்துவிட்டு, ஓராண்டு, ஈராண்டு, மூன்றாண்டு, நான்காண்டு அஞ்சலிக் கூட்டங்களை நடத்துவதில் நம் அரசியல்வாதிகள் 

கொழும்பு மாநாட்டுக்கு பிரதமர் செல்லக் கூடாது என்ற விவகாரத்தில் ப.சிதம்பரத்தின் நிலை என்னவாக இருந்தது?

சோனியா வீட்டில் நடந்த காங்கிரஸின் கோர் கமிட்டி கூட்டத்தில், பிரதமர் கொழும்பு மாநாட்டுக்குப் போகாமல் இருப்பதுதான் என்னுடைய தனிப்பட்ட கருத்து என்று ப.சிதம்பரம் சொல்லியிருக்கிறார்.

ஏ.கே.அந்தோனி, ஜி.கே.வாசன், ஜெயந்தி நடராஜன், நாராயணசாமி ஆகிய நான்கு அமைச்சர்களும் ஊடகங்களிடம் சொன்னாலும் ப.சிதம்பரம் வெளிப்படையாக தன்னுடைய கருத்தைச் சொல்லவில்லை.

முடிவுகள் எடுக்கும் கோர் கமிட்டியில் இருக்கும் நான் எனது முடிவை மறுபடியும் மீடியாக்களிடம் சொல்வது மரபு அல்ல. ஆனால், கோர் கமிட்டியில் சொல்லிவிட்டேன் என்றாராம் ப.சிதம்பரம்

No comments:

Powered by Blogger.