Header Ads

பார்த்திபனை பயமுறுத்தும் கேள்விகள்!

வித்தகன் படத்திற்கு பிறகு இனி கதாநாயகன் வேசமே வேண்டாம் என்று முக்கியத்துவம் வாயந்த கேரக்டர்களில் நடிக்கத் தொடங்கிய பார்த்திபன், தற்போது கதை திரைக்கதை வசனம் இயக்கம் என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் ஒரு சிறிய கேரக்டரில்கூட அவர் முகத்தை காட்டவில்லையாம்.

அதேசமயம், புதுமுகங்களை மட்டுமே வைத்து படம் பண்ணினால் தியேட்டருக்கு ரசிகர்களை இழுப்பது கடினமான காரியம் என்பதால், இப்போது விஷால், ஆர்யா, அமலாபால், டாப்சி, பிரகாஷ்ராஜ், உள்ளிட்டோரை கதைக்குள் இழுத்திருக்கிறார். அதோடு மட்டுமின்றி இன்னும் சில நடிகர்களை நடிக்க வைக்கவும் பேசிக்கொண்டிருக்கிறார்.

இதையடுத்து, கதையே இல்லாத ஒரு படத்துக்கு இவ்வளவு நடிகர் பட்டாளம் எதற்கு? என்று சிலர் அவரிடம் கேட்கிறார்களாம். அதற்கு, அதுதான் இந்த பார்த்திபனோட மேஜிக் என்று சொல்லும் அவர், படத்தில் இடைவேளை வரை எதை நோக்கி படம் செல்கிறது என்பதுகூட புரியாது என்று தில்லாக சொல்கிறாராம்.

அப்படி அவர் சொல்வதை கேட்பவர்கள், இப்போதெல்லாம் பாதி இடைவேளை வரை படத்தில் ஒன்றுமே இல்லை என்றால், பாதி ரசிகர்கள் இடைவேளையிலேயே தியேட்டரை விட்டு வெளியேறி விடுகிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா? என்று அவரிடம் நிலவரத்தை சொல்கிறார்களாம். அதைக்கேட்டு நிஜமாலுமே பயந்து போகிறாராம் பார்த்திபன்.

இருப்பினும் சுதாரித்துக்கொண்டு, கதையே இல்லையென்றாலும், காட்சிகளை ஜாலியாக நகர்த்தியிருக்கிறேன். அதனால், எக்காரணம் கொண்டும் ரசிகர்களுக்கு என் படம் போரடிக்காது. அதனால், ரசிகர்களை எனது திரைக்கதை கண்டிப்பாக தியேட்டருக்குள் கட்டிப்போடும் என்று நம்புகிறேன் என்று சொல்லி சமாளிக்கிறாராம் பார்த்திபன்.

No comments:

Powered by Blogger.