Header Ads

கத்தி'க்கு மீண்டும் கத்தி-கலக்கத்தில் படக்குழுவினர்.

கத்தி'படத்துக்கு இவ்வாறு பெயர் வைத்ததாலோ என்னமோ இந்த படம் ஆரம்பம் முதலே அதிக வெட்டுக்களை சந்தித்திருக்கின்றது. சர்ச்சைகளால் அதிகம் பேசப்பட்ட இந்த படம் ஒருவாறாகி கடந்த தீபாவளிக்கு திரைக்கு வந்து திரை விருந்து படைத்துக் கொண்டிருக்கின்றது.

வசூலிலும் சாதனை படைத்துக் கொண்டிருக்கும் இந்த கத்தி திரைப்படத்துக்கு இன்னும் சர்ச்சைகள் குறைந்த பாடில்லை.

                                                    

இப்போது புதிய வடிவில் ஒரு சர்ச்சை எட்டிப் பார்த்திருக்கின்றது.முன்னாள் தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதியின்  குடும்பம் மேற்கொண்டதாக கருதப்படும் 2G அலைக்கற்றை ஊழல் தொடர்பில் கத்தி படத்தில் விஜய் பேசிய வசனமே சர்ச்சையை தோற்றுவித்திருக்கின்றது.

'' 2G ன்னா என்ன வெறும் காத்துய்யா...அதுலயே ஊழல் பண்ணின தேசம் இது! ''

இப்படியொரு வசனம் படத்தில் இடம்பெற்றுள்ளது.அலைக்கற்றை ஊழல் வழக்கு இன்னமும் விசாரணையில் இருக்கின்ற போது எப்படி படத்தில் அது ஊழல் என்று விஜய் திட்டவட்டமாக சொல்லுவார் என்பதுதான் வழக்கை தாக்கல் செய்தவரின் முறைப்பாடாகும்.

இந்த வசனம் காரணமாக இயக்குநர் A.R முருகதாஸ் மீதும், நடிகர் விஜய் மீதும் மதுரையில் உள்ள குற்றவியல் நீதிமன்றத்தில் ஒருவர் அவதூறு வழக்கை  தொடுத்துள்ளார்.

இந்த வழக்கு நவம்பர் மாதம் 11 ம் திகதி விசாரணைக்கு வரவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இப்படியான சிக்கல்களுக்கு மத்தியில் கத்தி திரைப்பட வெற்றிவிழாவும் ஏற்பாடாகி நடைபெற்று முடிந்திருக்கின்றமை கவனிக்கத்தக்கது.

இந்தப் படம் வெளியான முதல் நாளே ரூ 23.85 கோடியைக் குவித்ததாக படத்தின் இயக்குநர் A.R முருகதாஸ் twitter இல் தகவல் வெளியிட்டிருந்தார்.

இப்போது  பிந்திக் கிடைத்த தகவல்களின் படி வெளிநாடுகளில்(அமெரிக்கா,லண்டன்,அவுஸ்ரேலியா )ஆகிய நாடுகளில் கத்தி வசூலில் சாதனை படைத்துள்ளது.

படம் வெளியான முதல் வார இறுதியின் வசூல் நிலவரப்படி லண்டனில் 2.2 கோடியும்(222,526 pounds ) அமெரிக்காவில் 570,207 USD அண்ணளவாக 3.5 கோடியும் ,அவுஸ்ரேலியாவில் 60,979 ASD கிட்டத்தட்ட 87.1 லட்சம் வசூல் கிடைத்தமை குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவில் இந்த ஆண்டு வெளியான ஜில்லா திரைப்படத்துக்கு அடுத்த நிலையிலும் ,இதுவரை அங்கு வெளியான  படங்களில் சூப்பர் ஸ்டாரின் எந்திரன் திரைப்படத்துக்கு அடுத்ததாகவும் இந்த கத்தி வசூல் ஈட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

ஒரு பக்கம் வசூலில் சாதனை மறுபக்கம் கத்தி சர்ச்சைகளிலும் சாதனை படைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

இளைய தளபதி விஜய் இப்போது என்ன சொல்கிறார் தெரியுமா..?
இந்த கத்தி படம் எனக்கு பலவற்றை கற்றுத் தந்திருக்கின்றது என்று.

                       

கத்தி கூரானதாக பட்டை தீட்டப்பட்டாலும் கத்தியை தயார் செய்த பட்டறையின் பெயரில் ஆரம்பித்த வெட்டுக்கள் +வேட்டுக்கள் இன்னுமின்னும் இளைய தளபதியையும் அவர்தம்  ரசிகர்களையும்  கவலையில் ஆழ்த்தும் என்பதில் ஒன்றும் தவறில்லை !

No comments:

Powered by Blogger.