மோடியும் ஜெயலலிதாவும் மாபெரும் சக்திகள்: நடிகர் விஜய்
பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியும், தமிழக முதல்வர் ஜெயலலிதாவும் நாட்டின் மாபெரும் சக்திகள் என்று நடிகர் விஜய் தனது வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், "நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தல் இந்திய அளவில் ஒரு புரட்சியை ஏற்படுத்தியுள்ளது.
தேசிய அளவில் அதிக இடங்களைக் கைப்பற்றிய நரேந்திர மோடிக்கும், தமிழகத்தில் வரலாறு காணாத வெற்றியைப் பெற்றுள்ள முதல்வர் ஜெயலலிதாவுக்கும் எனது மனப்பூர்வமான வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
உலக அளவில் மாபெரும் சக்தியாக திகழும் இந்த இரு தலைவர்களும் உலக அளவில் இந்தியாவை வல்லரசு நாடாகவும், இந்திய அளவில் தமிழகத்தை முதன்மை மாநிலமாகவும் மாற்றிக் காட்டுவார்கள் என்ற கோடானு கோடி மக்களின் நம்பிக்கையில் நானும் ஒருவனாக இந்த வெற்றியை எண்ணி மகிழ்ச்சி அடைகிறேன்" என்று நடிகர் விஜய் கூறியுள்ளார்.
No comments: