Header Ads

உள்ளே வராதே வெளியே போ -என்று மிஷ்கினை விரட்டியடித்த இளையராஜா!

சித்திரம் பேசுதடி, அஞ்சாதே, யுத்தம் செய் போன்ற படங்களுக்கு புதியவர்களை வைத்து இசையமைத்த மிஷ்கின், தான் இயக்கி ஹீரோவாக நடித்த நந்தலாலா படத்துக்கு இளையராஜாவிடம் சென்றார். ஒருவேளை தனது நடிப்பும், காட்சிகளும் உயிரோட்டமாக இல்லையென்றாலும், அவர் தனது பின்னணி இசையால் உயிர் கொடுத்து விடுவார் என்ற நம்பிக்கையில் இளையராஜாவை நாடினார் மிஷ்கின்.

அதற்கேற்ப அவரும் அந்த படத்திற்கு அற்புதமான இசையை கொடுத்து படத்தை மெருகேற்றிக் கொடுத்திருந்தார். ஆனால், படம் அதிக நீளமாகி விட்டது என்று இளையராஜா உருக்கமாக இசையமைத்துக் கொடுத்த இரண்டு பாடல்களை படத்தில் சேர்க்கவில்லை மிஷ்கின். இதனால் அதையடுத்து ஓநாயும் ஆட்டுக்குட்டியும் படத்திற்கு இசையமைக்க அவர் இளையராஜாவை தேடிச்சென்றபோது, உள்ளே வராதே வெளியே போ என்று இளையராஜா கோபத்துடன் கூறினாராம்.

இருப்பினும், ஓநாயும் ஆட்டுக்குட்டியும் படத்தின் கதையை பிடிவாதமாக இளையராஜாவிடம் சொல்லி, அவரையே அந்த படத்துக்கு இசையமைக்க வைத்தார் மிஷகின். இத்தனைக்கும் அந்த படத்தில் ஒரு பாடல் கூட கிடையாது. அதையடுத்து, தற்போது பாலாவின் தயாரிப்பில் தான் இயக்கும் பிசாசு படத்திற்கும் இசையமைக்க இளையராஜாவை நாடியிருக்கிறார் மிஷ்கின்.

ஆனால், அவர் இந்த படத்திலும் பாடல் வைக்க மாட்டார் என்று நினைத்தாரோ என்னவோ, இப்ப நான் ரொம்ப பிசி என்று சொல்லி எடுத்த எடுப்பிலேயே மறுத்து விட்டாராம் இளையராஜா. அதனால், இப்போது தனது யுத்தம் செய் படத்திற்கு இசையமைத்த கே என்பவரை பிசாசு படத்திற்கு ஒப்பந்தம் செய்திருக்கிறார் மிஷ்கின்.

No comments:

Powered by Blogger.