கள்ளக்காதலி வனிதா கோர்ட்டில் ஆஜர் 15 நாள் காவல் நீட்டிப்பு
சிதமபரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கணேசன் கொலை வழக்கில் கைதான கள்ளக்காதலி வனிதா சிதம்பரம் கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டார். அவரது காவலை மேலும் 15 நாள் நீட்டித்து மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார்.
போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்
விழுப்புரம் மாவட்டம் சேந்தநாடு கிராமத்தை சேர்ந்தவர் கணேசன் (வயது 30). இவர் சிதம்பரம் அண்ணாமலை நகர் போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக வேலை செய்துவந்தார். இவர் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு கிள்ளை போலீஸ் நிலையத்தில் வேலை செய்தபோது, சி.முட்லூரை சேர்ந்த திருமணமான பெண் வனிதா (28) என்பவருடன் கள்ளதொடர்பு ஏற்பட்டு அடிக்கடி உல்லாசமாக இருந்து வந்தனர். அப்போது கணேசன் வனிதாவை திருமணம் செய்துகொள்வதாக உறுதி கூறியிருக்கிறார்.
இந்நிலையில் கணேசனுக்கும், விழுப்புரத்தை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் கடந்த மாதம் 9-ந் தேதி திருமணம் நடைபெற்றது. ஆடி மாதத்துக்காக மனைவியை விழுப்புரத்தில் உள்ள அவருடைய பெற்றோர் வீட்டில் விட்டு விட்டு கடந்த 22-ந் தேதி அண்ணாமலைநகரில் உள்ள தனி வீட்டில் கணேசன் மட்டும் இருந்தார்.
கொலை
அப்போது கணேசனை பார்க்க வனிதா வந்தார். அப்போது வேறொரு பெண்ணை மணந்த கணேசன் மீது வனிதாவுக்கு ஆத்திரம் ஏற்பட்டது. அது தொடர்பாக அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் கணேசனை வனிதா கழுத்தை அறுத்து கொலை செய்தார். பின்னர் பஸ்சில் தப்பிச்சென்ற வனிதாவை விருத்தாசலத்தில் போலீசார் கைது செய்து , கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.
சிறையில் அடைக்கப்பட்டு 15 நாட்கள் ஆன நிலையில் சிதம்பரம் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் வனிதாவை ஆஜர்படுத்த அண்ணாமலைநகர் போலீசார் முடிவு செய்தனர். அதன்படி நேற்று காலை கடலூர் மத்திய சிலையில் இருந்து போலீஸ் பாதுகாப்புடன் வனிதா சிதம்பரத்துக்கு அழைத்துவரப்பட்டார்.
15 நாள் காவல் நீட்டிப்பு
பின்னர் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு எண்-1-ல் மாஜிஸ்திரேட்டு சுரேஷ்குமார் முன்னிலையில் வனிதா ஆஜர்படுத்தப்பட்டார். வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட்டு, வனிதாவுக்கு 15 நாட்கள் காவல் நீட்டிப்பு செய்து உத்தரவிட்டார். இதையடுத்து வனிதாவை கடலூர் மத்திய பெண்கள் சிறைக்கு போலீசார் அழைத்துச்சென்றனர். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரை கொலை செய்த வனிதாவை பார்க்க பொதுமக்கள் திரண்டதால் கோர்ட்டு வளாகம் பரபரப்பாக காணப்பட்டது.
No comments: