சமந்தாவுடன் போட்டி: நீச்சல் உடைக்கு மாறிய திரிஷா
கன்னட படத்தில் திரிஷா நீச்சல் உடையில் நடிப்பதாக பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது.
கதாநாயகிகள் கவர்ச்சிக்கு மாறி வருகின்றனர். அரைகுறை ஆடையில் குத்தாட்டமும் ஆடி வருகின்றனர். இளம் கதாநாயகிகள் கவர்ச்சியில் தாராளம் காட்டுவதால் சீனியர் கதாநாயகிகளுக்கும் ஆடை குறைப்பு செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டு உள்ளது.
சமந்தா ‘அஞ்சான்’ படத்தில் நீச்சல் உடையில் நடித்தார். இது சக நடிகைகளை உலுக்கியது. போர்த்திக்கொண்டு குடும்ப பாங்காக வந்த அவர் இப்படி நடித்துள்ளாரே என ஆச்சரியப்பட்டனர். சமந்தாவின் நீச்சல் உடை படங்கள் இன்டர்நெட்டிலும் பரவி உள்ளது.
நயன்தாரா ‘பில்லா’ படத்தில் நீச்சல் உடையில் வந்தார். அனுஷ்கா, ஹன்சிகா உள்ளிட்ட நடிகைகள் தெலுங்கு படங்களில் கவர்ச்சியாக வந்தனர். தற்போது திரிஷாவும் கவர்ச்சி பாதைக்கு திரும்பியுள்ளார்.
புனித்ராஜ்குமார் ஜோடியாக நடிக்கும் ‘பவர்’ என்ற கன்னட படத்தில் அவர் நீச்சல் உடையில் நீடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த நீச்சல் உடை ஸ்டில்லை விரைவில் ரிலீஸ் செய்ய படக்குழுவினர் திட்டமிட்டு உள்ளனர்.
No comments: