தம்பி தவறாக திருமணம் செய்து குழந்தையும் பெற்ற பெண்..
சா பாலோ: பிரேசிலில் தான் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டவர் தன்னுடன் பிறந்த தம்பி என்பதை அறிந்த பெண் கடும் அதிர்ச்சி அடைந்தார். பிரேசிலை சேர்ந்தவர் ஏட்ரியனா(39). அவருக்கும் லியான்ட்ரோ(37) என்பவருக்கும் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. அவர்களுக்கு 6 வயதில் ஒரு மகள் உள்ளார். இந்நிலையில் அந்த தம்பதி தொலைந்த உறவினர்களை கண்டுபிடிக்கும் குளோபோ ரேடியோ நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். அழகுசாதன பொருட்கள் விற்கும் ஏட்ரியனாவுக்கு ஒரு வயது இருக்கையில் அவரை அவரது பெற்றோர் கைவிட்டனர். தற்போது டிரக் டிரைவராக உள்ள லியான்ட்ரோ 8 வயதாக இருக்கையில் தான் தன்னை வளர்ப்பது மாற்றாந்தாய் என்பதை தெரிந்து கொண்டார். மேலும் தனது தாயின் பெயர் மரியா என்பதையும் தெரிந்து கொண்டார்.
ஏட்ரியனாவுக்கு தனது தாயின் பெயர் மரியா என்பது மட்டும் தெரியும். தங்கள் இருவரின் தாயின் பெயரும் ஒன்று என்று நினைத்த தம்பதிக்கு ரேடியோ நிகழ்ச்சியில் பங்கேற்றபோது தான் இருவரும் ஒரு தாய் மக்கள் என்பது தெரிய வந்து அதிர்ச்சி அடைந்தனர். ஏட்ரியனாவும், லியான்ட்ரோவும் தம்பதிகளாக வந்தனர். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு தான் அவர்கள் அக்கா, தம்பி என்ற உண்மை தெரிந்து அதிர்ச்சி அடைந்ததாக குளோபோ ரேடியா ட்விட்டரில் தெரிவித்துள்ளது.
No comments: