போதையில் 11-வது மாடி ஏ.சி பெட்டியில் நிர்வாணமாக நடனமாடிய பெண்
தென் சீனாவில் உள்ல ஒரு ஓட்டலில் நேற்று ஆணும் பெண்ணும் வாடகைக்கு அறை எடுத்தனர். அவருக்கு 11 வது மாடியில் அறை ஒதுக்கப்பட்டது. சிறிது நேரத்தில் அந்த பெண் நிர்வாண நிலையில் ஓட்டல் அறையின் ஜன்னலை திறந்து வெளியே சென்றார்., பின்னர் அங்கு பொருத்தபட்டு இருந்த ஏ.சி. பெட்டியின் மீது ஏறி நின்றவாறு நடனம் ஆட தொடங்கினார். இதை பார்த்த பொது மக்கள் அவர் தற்கொலை செய்து கொள்ள போவதாக கூச்சலிட்டனர். உடனடியாக மீட்பு படையினர் வரவழைக்கபட்டனர்.
ஆனால் அந்த பெண் தற்கொலை செய்து கொள்ள அங்கு செல்ல வில்லை எல்லை மீறிய போதையில் ஏ.சி. பெட்டியில் ஏறி நடனமாடி உள்ளார்.
மீட்பு படையினர் வந்து அந்த பெண்ணுக்கு அணிந்து கொள்ள ஒரு டவல் கொடுத்தனர் அதை வாங்கி அணிந்துகொண்ட பெண் மீண்டும் நடனம் ஆடினார். மீட்புக்குழுவினர் எவ்வளவோ எடுத்து சொல்லியும் அவர் கேட்கவில்லை. அவருக்கு தேவையான உணவுகளை பரிமாறுவதாக சொன்னவுடன் ஒருவழியாக அவர் கீழே இறங்க ஒப்புக்கொண்டார்.
மீட்புக்குழுவினர்களின் உதவியால் அவர் ஜாக்கிரதையாக ஓட்டல் அறைக்கு கொண்டுசெல்லபட்டார். அவருடைய அறையில் அதிகமான அளவில் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது. அவருடன் ஓட்டலுக்கு வந்திருந்த ஆண், தப்பியோடிவிட்டார்.
போதையில் பொது இடத்தில் அநாகரீகமாக நடந்துகொண்ட அந்த பெண் மீது வழக்குபதிவு செய்யபட்டு உள்ளது

No comments: