Header Ads

இணைந்து நடிக்க திட்டம் தீட்டும் நடிகர்கள்!

காதலில் தோற்ற வம்பு நடிகரும், தொடர் தோல்விகளை சந்தித்து வரும் ஒல்லிப்பிச்சான் நடிகரும் இப்போது உயிருக்கு உயிரான அளவுக்கு நெருக்கமாகி இருப்பதுதான் கோடம்பாக்கத்தின் லேட்டஸ்ட் ஹாட் டாபிக். ஒரு காலத்தில் காதல் விவகாரத்திலிருந்து பட விவகாரம் வரை முறுக்கிக் கொண்டிருந்தவர்கள் இப்போ பார்ட்டி, ஃபாரின் டூர் என ஒன்றாகவே திரிகிறார்களாம். இழந்த மார்க்கெட்டை தூக்கி நிறுத்த இருவரும் ஒரு படத்தில் சேர்ந்து நடிக்க முடிவு செய்திருக்கிறார்களாம். ஆனால் தயாரிப்பாளர்கள்தான் "ஒருத்தரை வச்சு சமாளிக்கிறதே கஷ்டம். இதுல ரெண்டு பேருமா...?" என்று தலைதெறிக்க ஓடுறாங்களாம். பிப்டி பிப்டி போட்டு சொந்தமாக எடுத்துடலாமா, உலகம் தாண்டி படம் இயக்குற அண்ணனையே டைரக்ட் பண்ண வச்சிடலாமான்னு யோசிச்சிக்கிட்டு இருக்காங்காளம்.

No comments:

Powered by Blogger.